கவிதைகள்
கருத்துப்பிழை அல்ல!… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
காட்சிகளை காண்கிறேன்
எழுத்துக்களால் உயிர்கொடுக்கிறேன் கவிதை உருப்பெறுகிறுது காண்பவைகளில் அனைத்தும் தெரியும் அரவணைக்கப் படுவைகளும் தெரியும் அவலங்கள் தலைவிரித்தாடுவதும் தெரியும் அரவணைப்பை சொன்னால் அன்பனென்பர் அவலங்களைச் சொன்னால் வம்பனென்பர் சமூகத்தில் கிடைப்பவைகளை சேகரிப்பேன் சேகரிப்பவற்றிற்கு எழுத்துக்களால் வண்ணம் பூசுவேன் வண்ணம் பூசிய சேகரிப்புக்கள் வளமாகவும் தெரியும் வளமற்று வரட்சியாயும் தென்படலாம் வளமோ வரட்சியோ சேகரிப்பைப் பொருத்ததே வண்ணத்தைக் குறைகூறி வரட்சி கண்டால் வசைபாடதீர் கடலுக்கு நீலமும் காரம்பசுவுக்கு கருப்பும் வண்ணம் தந்தால் வண்ணத்தில் குறையோ அல்ல உங்கள எண்ணத்தில் பிழையோ இங்கே நடந்து அரங்கேறுவதை நாளும் காண்கிறேன் நடப்பதை சொல்ல எழுத்தின் துணைகொண்டேன் நல்லவற்றை எழுதினால் நல்ல கதையாகிறது தீயவற்றை சுட்டிக் காட்டினால் சுட்டெரிப்பதேனோ நல்லதை எழுத்துக்களால் கெட்டதாக்க மாட்டேன் கெட்டவற்றை என் எழுத்துக்கள் நல்லதாகவும் காட்டிடாது உறவு மெச்சவென கவிதையும் ஊர் மெச்சுமென கட்டுரையும் உலகு மெச்சக்கூடுமென கதையும் உலாவருகின்ற எழுத்துலகில் நிலாவது நீலவானில் நீந்துவதுபோல வளர்பிறையாய் ஒளிர்வதும் தேய்பிறையாய்்தேய்வதும் காட்சிப்பிழையாகும் கருத்தினில் பிழை ஏதுமில்லை!– சங்கர சுப்பிரமணியன்.