கவிதைகள்
“அம்மா அப்பாவுடன் வீடுகட்டி வாழ்ந்தது வரலாறு” …. கவிதை …. முல்லைஅமுதன்.
அம்மா அப்பாவுடன்
இந்த வளவில் வீடுகட்டி வாழ்ந்தது நமக்கு வரலாறு. தனது ஒவ்வொரு திருமணநாளின் போதும் ஒ வ்வொரு மரமாய் நடுவாள். வாழை,அரிநெல்லி,ஒட்டுமாங்கன்று, தோடை,எலுமிச்சை என விரிந்தன. அம்மாவுக்காக அப்பா தண்ணீர் ஊற்றுவார். நாம் வளர்ந்தபிறகும் அவைபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அம்மாவின் நோய்கழிவுகளை மரங்களின் அருகிலேயே புதைப்பார்.. காலங்கள் வருடங்களை கூட்டி அள்ளிச் சென்றுகொண்டிருந்தன… முதியோர் இல்லத்திலிருந்து வந்த நாளிலிருந்து அப்பா மரங்களுடனேயே காதலுடன் பேசுகிறார் என்று மனைவி சொன்னாள். தன்னை இந்த மரங்களுடனேயே புதைத்துவிடும்படி தன் பேரர்களுக்கு கதையோடு கதையாக சொல்லிக்கொண்டிருந்தார். கடனில் வீடும்,வளவும் போய்விட அப்பாவின் உடலைப் புதைப்பதற்கு ஒரு துண்டு நிலமின்றி ஏனோ அலைறோம்..முல்லைஅமுதன்
அருமையான வரிகள் வாழ்த்துகள்