இலக்கியச்சோலை

லியோ டால்ஸ்டாய் படைத்த “போரும் அமைதியும்”: உலக இலக்கியத்தின் உன்னதமான படைப்பு!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

உலகின் மகத்தான இலக்கிய சிருஷ்டி லியோ டால்ஸ்டாய். அவர்  படைத்த  “போரும் அமைதியும்” உலக இலக்கியத்தின் உன்னதமான படைப்பாகும்.உலக இலக்கியத்தின் உலராத ஊற்றாக, ரஷ்ய படைப்புகளில் என்றும் வீசும் காற்றாக லியோ டால்ஸ்டாய்  படைத்த  “போரும் அமைதியும்” விளங்குகிறது.
2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிபிசியின் கருத்துக்கணிப்பொன்றில் லியோ டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ நூல் 20ம் இடத்தை பெற்றிருந்தது. 2009இல் நியூஸ்வீக் வெளியிட்ட முதல் 100 நூல்களில் இந்நூல் முதலிடத்தைப் பிடித்தது.
ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையினை அற்புதமாக விளக்கவும் செய்த லியோ டால்ஸ்டாய் காலம் கடந்தும் அனைவராலும் அவரது எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன. இதனாலேயே ரஷ்ய இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயராக லியோ டால்ஸ்டாய் விளங்குகிறார்.
உலக இலக்கிய ஊற்று :
ரஷ்ய இலக்கியமென்பது உலக இலக்கியத்தின் உலராத ஊற்றுகளிலொன்று.  ரஷ்ய இலக்கிய வாசத்தினை யாராலும் தடுக்க முடியாது. மறைக்க முடியாது. உலக இலக்கியத்துக்கு அதன் பங்களிப்பென்பது போற்றுதற்குரியது.
லியோ டால்ஸ்டாய் புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார். இவரது மிகச் சிறந்த ஆக்கங்களான போரும் அமைதியும், அன்னா கரேனினா ஆகியவை, 19 ஆம் நூற்றாண்டு ரஷ்ய வாழ்க்கையை விபரிப்பதில் உண்மைவாதப் புனைகதைகளின் உயர்நிலையைக் காட்டுகின்றன.
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 1828-ம் ஆண்டு செப்டம்பர் 9இல்
பிறந்தார். காலம் கடந்தும் அனைவராலும் அவரது எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன. நாவல்கள் உட்பட சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், சிறுவர்களுக்கான நீதிக்கதைகளும் எழுதியுள்ளார்.
இவருடைய அன்னா கரீனீனா, போரும் அமைதியும் போன்ற நாவல்கள் புகழ்பெற்றது. டால்ஸ்டாய் இறுதி வரை வன்முறைகளுக்கு எதிராகவே வாழ்ந்து வந்துள்ளார்.
பாராட்டுவதற்கான கலைச்சிறப்புடைய நூல்களை மட்டும் டால்ஸ்டாய் படைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையினை அற்புதமாக விளக்கவும் செய்தார் என டால்ஸ்டாய் மறைவின் போது லெனின் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபுத்துவ வரலாறு ;
லியோ டால்ஸ்டாய், மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில் பிறந்தார். டால்ஸ்டாய்கள் ரஷ்யாவில் பெயர்பெற்ற பழைய பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ரஷ்ய உயர்குடியின் பெரும் குடும்பங்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள். அலெக்சாண்டர் புஷ்கின், லியோ டால்ஸ்டாயின் உறவினராவார். லியோ டால்ஸ்டாய் வகுப்பு உணர்வு கொண்டவராக இருந்தார்.
உலகப் புரபல்யமான “போரும் அமைதியும்” ஐந்து ரஷ்ய அரச குடும்பங்களின் பார்வையில், ரஷ்ய மீதான பிரான்சியப் படையெடுப்பை அடுத்த நிகழ்வுகளையும் சார்மன்னர் சமூகத்தில் நெப்போலிய காலத்தின் தாக்கத்தையும் விரிவாக விவரிக்கின்றது.
போரும் அமைதியும் நாவல் :
போரும் அமைதியும் (War and Peace, ரஷ்ய மொழி: Война и миръ,) ருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புதினம் ஆகும். இந்த நூல் முழுமையாக 1869ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது. இதிகாச அளவிலான இந்நூல் உலக இலக்கியத்தில் மிகவும் முதன்மையானதாக இன்றும் கருதப்படுகின்றது. இதுவும் டால்ஸ்டாயின் மற்றொரு படைப்பான அன்னா கரேனினாவும் (1873–1877) அவரது சிறந்த இலக்கியச் சாதனையாக பல காலங் காலமாக கருதப்படுகின்றன.
டால்ஸ்டாய், போரும் அமைதியும் “புதினமல்ல, கவிதையுமல்ல, வரலாற்று பதிவேடுமல்ல” எனக் கூறியுள்ளார். 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிபிசியின் கருத்துக்கணிப்பொன்றில் இப்புதினம் 20ம்இ்டம் பெற்றிருந்தது.
இப் படைப்பின் பெரும்பகுதி, குறிப்பாக பிந்தைய அத்தியாயங்களில், கதை விவரிப்பாக இல்லாமல் மெய்யியல் விவாதமாக உள்ளன.
ருசியாவின் சிறந்த இலக்கியப் படைப்பு எந்தவொரு சீர்தரத்திலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றார். இப்புதினம் முழுமையாக 1869இல் பதிக்கப்பட்டது. 2009இல் நியூஸ்வீக் வெளியிட்ட முதல் 100 நூல்களில் முதலிடத்தைப் பிடித்தது.
எனவே போரும் அமைதியும் நூலை டால்ஸ்டாய் “புதினம்” என அழைக்கத் தயங்கினார். அவரது கூற்றுப்படி அவரது முதல் புதினம் அன்னா கரேனினா ஆகும்.  19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் கவிஞர் மற்றும் விமர்சகர் மத்தேயு அர்னால்ட்” டால்ஸ்டாய் எழுதிய ஒரு நாவலானது கலையின் வேலை அல்ல, மாறாக வாழ்க்கையின் ஒரு சிரு பகுதி” என்று கருதுகிறார்.
 
தமிழில் மொழிபெயர்ப்பான நாவல்
டி. எஸ். சொக்கலிங்கம் இப்புதினத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
 சிறந்த இதழியலாளர் மட்டுமல்ல, சொக்கலிங்கம் சிறந்த படைப்பு இலக்கியவாதியும் ஆவார். லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற நாவலான போரும் அமைதியும் என்ற நாவலை தமிழாக்கம் செய்தார். இது தவிர, சிறுகதை, நாவல், கவிதை என இலக்கியத்தின் அத்தனை துறைகளிலும் சிறப்பான பங்கினை நல்கியுள்ளார் சொக்கலிங்கம்.
லியோ டால்ஸ்டாய் படைப்புகளில்
போரும் அமைதியும் மற்றும் அன்னா கரேனினா மற்றும் ஹதாஜி முரத், இவான் இலிச்சின் மரணம் ஆகியவை போற்றுதலுக்குறிய படைப்புகளாகும்.
விமர்சகர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் டால்ஸ்டாயின் கலைக்கு தாங்களே அத்தாட்சிகளாய் இருந்திருக்கின்றனர். விர்ஜினியா வூல்ஃப் ஒரு படி மேலே டால்ஸ்டாயை அனைத்து நாவலாசிரிகளையும் விட மிகச்சிறந்தவர் என்று அறிவித்தார்.
போரும் அமைதியும் எழுதப்பட்ட நாவல்களிலே மிகப் பெரிய நாவல்களில் ஒன்று, அதன் வியத்தகு அகலத்திற்கும் ஒற்றுமைக்கும் குறிப்பிடத்தக்கது. அதன் பரந்த கதைக்களம் 580 கதாபாத்திரங்களை உள்ளடக்கியது, பல வரலாற்றுடன் மற்றும் கற்பனை கலந்து உள்ளது. இந்தக் கதையானது குடும்ப வாழ்க்கையிலிருந்து தொடங்கி நெப்போலியனின் தலைமையகத்திற்கும், ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் நீதிமன்றத்திற்கும், ஆஸ்டெர்லிட்ஸ் மற்றும் போரோடினோ போர்க்களத்திற்குள்ளும் நகர்கிறது.
வரலாற்றின் தத்துவ புதினம் :
இந்த நாவல் டால்ஸ்டாயின் வரலாற்றின் தத்துவத்தையும், குறிப்பாக நெப்போலியன் மற்றும் அலெக்ஸாண்டர் போன்ற தனிநபர்களின் முக்கியத்துவத்தையும் ஆராய்கிறது. ஆச்சரியப்படத்தக்க வகையில், டால்ஸ்டாய் போரும் அமைதியும் ஒரு நாவலாக அவர் கருதவில்லை. அந்த நேரத்தில் எழுதப்பட்ட பெரும் ரஷ்ய கற்பனைகளில் பலவற்றை நாவல்கள் என்று அவர் கருதினார்.
அன்னா கரேனினாபோரும் அமைதியும் நாவல்கள் மிகப்பெரிய பாரட்டுக்களைப் பெற்றபோதும் டால்ஸ்டாய் அந்தப் பாராட்டுகளை நிராகரித்தார்.அன்னா கரேனினா நிகழ்நிலை புனைவுகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.
முதலில் எழுதிய போரும் அமைதியும் ஆக்கத்தை டால்ஸ்டாய் புதினத்திற்கும் மேலானதாகக் கருதியதால் இதனையே தம்முடைய முதல் உண்மையான புதினமாக கருதினார். மேலும் பின்னாளில் அந்த நாவல்கள் வாழ்க்கையின் உண்மையான யதார்த்தத்தைக் காட்டவில்லை என்றும் வாதிட்டார். “போரும் அமைதியும்” படைத்த லியோ டால்ஸ்டாய் உலகின் மகத்தான இலக்கிய சிருஷ்டியே !
லியோ டால்ஸ்டாய் படைத்த புதின இலக்கிங்களினால் வையக வரலாற்றில் ஒரு மகத்தான இலக்கிய சிருஷ்டியாகவே மிளிர்கின்றார். போரும் அமைதியும் புதினமானது உலக இலக்கியத்தின் உலராத ஊற்றாகும்.
        ஐங்கரன் விக்கினேஸ்வரா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.