கவிதைகள்
முனைந்து முயல்வீரா?… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
மழை பொழிகிறது
உயிர்களுக்கு உதவுமென மழைக்கு தெரியாது ஆறு ஓடுகிறது என்ன பயனென அதுவும் அறிந்திடாது பயிர் வளர்கிறது பயனடைவார் உளரென உணர்ந்திடுமோ ஆதவன் எழுந்தாலும் கடல் நீர் ஆவியாகி மழை பொழியுமன அறிவதில்லை மரங்கள் கனிகளை கொடுத்தாலும் உண்பது யார் எதுவென உணருமா வைரக்கிரீடம் வழங்கினாலும் வறியவர் வயிற்றைக் குளிர்வித்தலுக்கு இணையாமோ குடமுழுக்கு ஆயிரம் செய்தாலும் வடமிழுத்து அதை வாழ்வின் பயனென்றாலும் வற்றிய வயிறெலாம் வளம்பெறுமா படைத்துப் பரவசமாய் தொழுதாலும் பட்டினியால் சாவோர் நிலை மாறிடுமா பாமாலை இயற்றி பாடிப்போற்றினாலும் அங்கொருவனுக்கு எழுத்தறிவித்தல் போலாகுமா இயக்கும் இயற்கையே எதையும் எதிர்பார்த்து இயங்காதபோது இயற்கைக்கு புறம்பாய் எதையெதையோ செய்து எதிர்பார்த்தல் தகுமோ படைப்பதை எல்லாம் பத்திரப்படுத்து என்கிறார் பலரும் படைப்பதெலாம் நம் இனத்துக்கு நம்மின மக்களுக்கென்றார் மறுக்கவில்லை படைத்தவற்றை எல்லாம் இங்கொருவன் அழிக்கின்றானே இனத்தை இனமக்களை அழிப்பதை முதலில் தடுத்தபின்னே படைத்ததை பத்திரப்படுத்தி மகிழ்ந்தால் அதிலொரு பொருளுமுண்டு உண்டு மகிழ மக்களின்றி அவர்களை பறிகொடுத்தபின்னே உணவு உற்பத்திதனை பெருக்குவதால் ஏதுபயன் பத்திரப்படுத்திதான் என்னபயன் நாம் படைப்பதெல்லாம் இனத்துக்கெனினும் நம் புகழுக்கென்பதுவும் தொக்கி நிற்கிறதே பத்திரப்படுத்துவதும் அதற்கேயன்றோ நம் முன்னோர் ஆயிரமாயிரம் படைத்தார் எதவும் நிலையில்லை என உணர்ந்தாரோ பத்திரப்படுத்திடவும் மறந்தாரோ நாமன்றோ தேடியலைந்தோம் தேடிப்பிடித்ததும் நாமன்றோ பத்திரப்படுத்தியதும் நாமன்றோ இன்று படித்து மகிழ்வதும் நாமன்றோ உண்மையில் படைப்பில் உயிரும் உணர்வும் இருக்குமெனில் ஒருநாள் அது உயிர்த்தெழுமே சான்றாக இலக்கியங்கள் பலவுண்டாம் அவை சாதனையாய் இங்கே நிற்பதுண்டாம் பாது காப்போம் இன்று நம்மினத்தை நம்மினம் பாதுகாக்கப்படலே தலையாயதன்றோ இருப்பவை இங்கு ஏராளம் ஆயினும் படைப்போர் தோன்றுவர் பல்லாயிரம் படைத்ததை அவரும் பாதுகாப்பர் இன்று நம்மினத்தை நாம் பாதுகாப்போம்படைப்பாளிகளே படையுங்கள் பத்திரப்படுத்திய படைப்புக்கள் இங்கே பற்பல உண்டாம் படைப்பதை எல்லாம் பத்திரப்படுத்தும் மும்முரத்தில் பகுதியாவது நீவீர் முனைந்திடுவீர் இனம்காத்துமே பாதுகாக்க முயல்வீரா?
-சங்கர சுப்பிரமணியன்.