கவிதைகள்
ஒற்றைக் காற்சிலம்பை பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன் நெடுநாளாய்!…. கவிதை …. முல்லைஅமுதன்.
தன் வீட்டுச் சிதனமாய்
பெற்றதை எனக்குத் தந்திருந்தாள் அம்மா.
விவசாயக்கடன் கடடவென
மாமா அடிக்கடி வாங்கிச் செல்வதுண்டு.
அதில் ஒன்றை அவரே
தொலைந்து விட்டதாகச் சொல்லி
தானும் ஒரு நாள் காணாமல் போனார்.
குடிகார அப்பாவும்
ஒற்றைச்சிலம்பைக் கேட்டுப்பார்த்தார்…
அம்மா காப்பாற்றித் தந்திருந்தாள் .
இன்று அம்மாவும் இல்லை…
சப்பாத்துக் கால்கள்
வீட்டையும்,என்னையும் சூறையாடிய பின்னும்,
தனிமரமாய்..
அந்த ஒற்றைச் சிலம்பைப்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்..
காணாமலாக்கப்பட்ட
என் போராளி மாமனுக்காக..காதலுடன் …
முல்லைஅமுதன்.
மிகவும் உருக்கமான நேர்த்தியான வலிகள் மிகுந்தபடைப்பு. சிறப்பு.
ஒவ்வொரு வரியும் உணர்ச்சியின் கொந்தளிப்பு
உணர்வைத்தூண்டா கவிதை மணமற்ற மாலை
ஆயிரமாய் காகிதப்பூக்கள் அணி செயுமிடத்தில்
பாயுதே நெஞ்சில் பனிமலராய் மணம் பரப்பியே
சங்கர சுப்பிரமணியன்.