கவிதைகள்

“கண்ணியமாய் இரு” ….. ( கவிதை ) …. ஞா.டிலோசினி.

நிராகரிப்புக்களை கண்டு

நித்தம் நித்தம் நெஞ்சு உடையாதே! – மானிடா!

நல்லவர் போல் நடித்து

நன்மை செய்பவர் போல் – தமைக் காட்டி

உள்ளொன்று வைத்து – திட்டமிட்டு

உதறிவிடுவர் இவ்வுலகில்.

கண்ணியமாய் இரு!

 

அரசியல், தனக்கு சார்பானவர்களையே

அருகில் வைத்துக் கொள்ளும்

இதில் யாம் கண்டவர்களில் – யாரும்

விதிவிலக்கல்ல கண்ணியமாய் இரு!

அநியாயம் கண்டு கோபக்கனல் எழுந்தாலும்

பொங்கிடாதே! காலம் வரும்வரை

கண்ணியமாய் இரு!

 

உயர் நிலையில் – இருந்து

தாழ் நிலைக்கு வந்தாலும்

தகுதியில்லை இது எனக்கு – என

தள்ளி நில்லாதே! – ஒருபோதும்

அதிலும் கற்கும் அனுபவப் பாடம் உண்டு

அனுபவம் கற்றிட

கண்ணியமாய் இரு!

 

உன்னிலை கண்டு வியக்க வேண்டும் – இவ்வுலகம்

நாளுக்கு நாள் முன்னேற முயன்றிடு!

சதியை உன் மதியால் வெல்ல எழுந்திடு!

சக்தி மிக்க ஆயுதமாய் உன் அறிவை – கூர்மையாக்கு!

குறி சாரும் வரை ஓயாது உழைக்க புறப்படு!

அடக்கமாய் இருந்து, நினைத்ததை முடிக்க

கண்ணியமாய் இரு…!!! கண்ணியமாய் இரு…!!!

ஞா.டிலோசினி.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.