கவிதைகள்
“நான் பொறுப்பல்ல” …. கவிதை ….. சங்கர சுப்பிரமணியன்.
எப்படி எல்லாம் கவிதையை எழுதலாம்
என்று எண்ணியதால் வந்த எண்ணமாம் பழமாய் எண்ணம் மனதில் பழுத்ததாம் மாம்பழத்திற்காய் வடித்த கவிதையாம் இத்தகு கவிதையும் கவிதை ஆகுமோ கவிதையல்ல என்றாலும் எழுதுகிறேன் இத்தகு கவிதையை பலர் எழுதுவதால் நானும் எழிதினால் எதுவும் தவறில்லை முக்கனியில் ஒன்றெனில் பொய்யல்ல முத்தமிழில் சொல்லியதும் பொய்யல்ல நற்றமிழில் சொல்வதென்றால் இதுவும் நயமிக்க கனியென்பேன் பொய்யாமோ உலகம் உருண்டையென நாம்நினைக்க தட்டையென நம்பவைத்த கனி இதுவாம் இருவருக்கு நடத்தி வைத்த போட்டியில் ஒருவரை அறிவாளியாக்கிய நற்கனியாம் பெற்றோர் சொல்லையேற்று மயில்மீதேறி உலகைச் சுற்றிவர உடன்பட்டு நின்றகனி இருவருக்கு போட்டி என்று சொன்னாலும் இளையவனை ஏமாற்றி நின்ற இனியகனி பஞ்சாமிர்தம் என்று பக்தியொடு உண்பார் நெஞ்சார அவனைப் போற்றித் தொழுவார் அபிசேகமாக அவனது மேனியில் தவழவிட ஆக்கிய பிரசாதமதில் கலந்திட்ட கனியாம் பிள்ளைகள் அனைவருமே விரும்பம் கனி பெற்றோர் சேர்ந்ததையே விரும்பும் கனி உற்றார் உறவினரும் ஒன்றாய் நாடும் கனி கற்றோர் கல்லாதோர் விரும்புகின்ற கனி ஔவை தந்தது அதியமானுக்கு நெல்லிகனி நாரதன் தந்தான் கலகம்செய்ய இந்தக்கனி இளையவனை கோபமுற்று ஓடச்செய்த கனி மலைமீது தனியாக நிற்பதற்காய் நின்றகனி மாமரத்தில் கொத்துகொத்தாய் காய்க்குமே கால்லெறிந்தால் மண்ணில் விழ வைக்குமே கொட்டைவரை சுவைத்திடவே இனிக்குமே கொட்டையை புதைத்தாலது முளைக்குமே காயிலே இனிக்கும் மாங்காய் பல உண்டு கனிந்த பின்னும் புளிக்கும் பழமும் உண்டு ஊறுகாய்க்கு ஏற்ற மாங்காய் புளிப்துண்டு நாறுநாறாய் இருக்கும் பழங்களும் உண்டு இரு இனத்தை ஒட்டவைத்ததால் ஓரினமாம் ஓரினமான பின்பு அதுவே ஒட்டு மாம்பழமாம் கிளிமூக்கு போலிருந்தால் கிளிமூக்கு பழம் கிளிகளும் பழத்தில் தொங்கி கொத்துமாம் பழம்முழுக்க கொட்டையுடன் மாம்பழமாம் மிகச்சிறிய கொட்டையுடனும் மாம்பழமாம் சிறுவர் பாட்டில்வரும் சிறந்த மாம்பழமாம் சினிமா பாட்டில் வந்துதிக்கும் மாம்பழமாம் சீனிமாமா வாங்கித்த சிறந்த நல்ல மாழ்பழம் வேணியக்கா வாங்கிய விலையுயர் மாம்பழம் தின்னவும் இனிக்குதே தெவிட்டாதிருக்குதே மன்னியுடன் தின்னவே மகிழ்வாய் இருக்குதே இப்படி கவிதை எழுதினால் தப்பில்லையென அப்புமாமா எனக்கதை சொல்லியும் தந்தாரே சொன்னபடி எழுதினேன் அழகழகு என்றாரே என்மனமோ ஏற்கல கவிதையென சொல்லல ஏற்பவர் ஏற்கட்டுமிதை புகழ்ந்து தள்ளட்டும் உள்ளதை சொன்னால் அதில் தவறில்லையே நல்லவரே சொல்லுங்கள் இதுவும் கவிதையா கவிதையென நம்பினால் நான் பொறுப்பல்ல.-சங்கர சுப்பிரமணியன்.