“இருந்தால் சொல்லுங்களே”?…. கவிதை ….. சோலச்சி.
இப்போது வரை தேடிப் பார்க்கிறேன்
எங்கும் இல்லை எதிலும் இல்லை
எங்காவது கிடைத்திடாதா என்றே ஏங்குகிறேன்…..
ஆகா வளர்ச்சி…. அபார வளர்ச்சி என்றே
எங்கோ முழங்குவது கேட்கிறது
அடடா… அடடே என்று புருவம் உயர்த்தி திரும்புகிறேன்….
இருந்ததை எல்லாம் வித்தாச்சு
இன்னும் விலையை ஏத்தியாச்சு
கடனை வாங்கி குவிச்சாச்சு
காலர தூக்கி விட்டாச்சு – இனி
விக்கிறதுக்கு ஒன்னுமில்லே வரியை கூட்டியாச்சு…
கருப்பு பணத்தை மீட்டாச்சு – அவரவர்
கணக்கில் பதினஞ்சு இலட்சம் போட்டாச்சு
அட்டையுடன் எல்லாத்தையும் இணைச்சாச்சு – இது
அசுர வளர்ச்சி என்றே கூவியாச்சு…
பசி பட்டினி தொடர்கதையாச்சு
பஞ்சம் பிழைக்க தென்குமரிக்கு அனுப்பியாச்சு
ஒரே நாடு ஒரே மொழி ஒரே ரேசன் புகுத்தியாச்சு – தெற்கில்
சோத்துக்கு வழி தேடிக்குவான் என்றே கையை விரிச்சாச்சு
இனக்கலவரம் செஞ்சு தீக்கிரையாக்கியாச்சு
இன்னும் கூடுதலாய்
ஊர்வலமாய் தாய்நாட்டை அம்மணமாக்கியாச்சு….
கருத்து சுதந்திரத்தை பறிச்சாச்சு
கடவுள் பேர் சொல்லி அறிவை மழுங்கியாச்சு
ஏவல்துறை கொண்டு எதிரணியை நசுக்கியாச்சு
எதிர்ப்பவனை எரிகுழாய் கொண்டு பொசுக்கியாச்சு…
அடடா இதுதான் வளர்ச்சி என்றே மார்தட்டியாச்சு
அப்பாவி மக்களைத்தான் நம்ப வச்சாச்சு….
எஞ்சியதை எல்லாம் அதிகாரம் சுருட்டிருச்சு – மக்கள்
எந்திரிக்க வழியில்லை இருளாச்சு…
எங்கே இருக்குனு சொல்லுங்களே….? – அதன் பேர்
சுதந்திரமாம்….. சுதந்திரம்
– சோலச்சி
உண்மை , மனித இனம் கூட ச்சி என்றே போயாச்சு
அருமை.அனைத்தையும் வித்தாச்சு கடனைவாங்கி குவிச்சாச்சு வளர்ச்சி என தம்பட்டம் அடிச்சாச்சி
வித்தியாசம் தெரியாமல் போச்சு
அன்று இருந்த வெள்ளை காரனுக்கும்
இன்று இருக்கும் கொள்ளை காரனுக்கும்
எழுத்தில் இருக்கும் வலி
இங்கு பலரின் மனதில் இருக்கும் வலி
இனி ஒரு இனிய சுதந்திரம் நாடு அடைய
ரெடியாச்சு.
இருப்பதை இல்லாதது போல் காட்டி
இல்லாததை இருப்பதாய் காட்டிடும்
களவாணித்தனம் கடுகளவும் இல்லை
அளவொடு சொல்லும் தன்மை கண்டேன்
சங்கர சுப்பிரமணியன்.
இருப்பதை இல்லாதது போல் காட்டி
இல்லாததை இருப்பதுபோல் காட்டும்
களவாணித்தனம் கடுகளவும் இல்லை
அளவொடு சொல்லும் அற்புதமன்றோ
சங்கர சுப்பிரமணியன்.