கவிதைகள்
“எத்தகு பேதைத்தனம்” … கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
அநியாயம் அதிகரிக்கும் போது
அவன் அவதாரம் எடுப்பானாம் லட்சக்கணக்கான மக்களை கொன்றபோது பூ பிஞ்சு காய் கனியென வேறுபாடின்றி வெறிச்செயல் புரிந்தபோது வராதபோனான் இனியுமா வருவானவன்ஜலக்கிரீடை புரிந்து மகிழ்ந்திருந்ததுபோல்
குருதியில் மக்கள் குளித்து மாண்டபோது தானும் குளித்து துயரடையாமல் எங்கு சென்று மறைந்து கொண்டான் முழம்முழமாய் புடவையை வாரிவழங்கியவன் மணிப்பூரில் எங்கே மாயமானான் எல்லா உயிர்களையும் காத்தளிப்பவன் வேறு மதத்தினர் என வெறுப்பு காட்டினானோ ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்பார்கள் தன் பெண்களை வேதனையில் பரிதவிக்கவிட்டு பார்த்து மகிழ்ந்தவன் வேற்று பிள்ளைகளின் வேதனைகண்டு வீறுகொண்டு எழுந்து வந்திடுவானா தீண்டாமையை மனிதர்கள் ஏற்பதுபோல் அவனும் ஏற்று மகிழ்ந்து இன்புறுகிறானோ அல்லது பாதத்திலிருந்து பிறந்ததினால் பழியென பரிதவிக்கவும் விட்டானோ இனத்துக்குள்ளே வேற்றுமையை இனமக்களே உயர்த்திப் பிடிக்கும்போது எம்பருமான் பள்ளிகொண்டான் அவனை எதுவும் சொல்ல நியாயமில்லை தன் குடும்பம் தன்பிள்ளை தன் உறவு என வந்து நின்றிங்கு ஆடுகையில் காயைக் கனியாக்கி கருத்து சொல்லும் மாந்தர் மத்தியிலே உயர்பண்பெனும் உரைகல்லை அடகுவைத்தவர் எங்ஙனம் நீதி சொல்வார் காசுக்கு உதவாத அற்பச்செயலிலேயே கயமைத்தனம் ஊஞ்சலாடுகையில் இங்கு தரமேது தரத்தில் சிறப்பேது தடி எடுத்தவன் தண்டல்காரனாகிறான் கண்ணெதிரே காயை கனி என்கிறான் கண் இருப்போர் கண்ணை மறைக்கிறான் உடல் சதையென உயிரோடிருப்பவனே ஊறுசெய்ய தயங்காதிருக்க சிலையாய் நிற்பவன் சினங்கொண்டு எழுவான் என்பது எத்தகு பேதைத்தனம்!-சங்கர சுப்பிரமணியன்.