கவிதைகள்
மாணிக்கமும் ஆசிரியரும்!…. கவிதை ….. சங்கர சுப்பிரமணியன்.
அற்புதமான நிகழ்வுதான்
அதிசயமான நிகழ்வும் கூட மாணவன் மாணிக்கம் வாங்கிய மதிப்பெண்கள் பற்றியதே படிக்கின்ற மாணவன்தான் படிப்பேவராத கடைநிலையனல்ல விருப்பமான பாடம் தமிழாகும் விரும்பிப் படிக்கும் பாடமும் தமிழே தேர்வில் தேர்ச்சி பெறுமளவு மதிப்பெண்கள் தவறாது பெற்றிடுவான் விரும்பித் தமிழ் படித்தாலும் வாங்கும் மதிப்பெண்கள் தேர்ச்சி பெறுமளவே பெற்றோர் பணிமாற்றத்தினால் மாணவர்கள் சிலர் அவன் வகுப்பில் சேர்ந்தனரே வந்துசேர்ந்த புதிய மாணவர்கள் வாங்குகின்ற மதிப்பெண்களை மாணிக்கத்துடன் ஒப்பிட இயலாதே புதிதாக வந்தவர்கள் புதுவெள்ள ஓட்டம்போல மிக அதிக மதிப்பெண்களும் பெற்றனரே எல்லோரும் வியந்து போற்றினரே என்ன அதிசயம் நிகழ்ந்தேறியதோ இதுவரை அதிகமதிப்பெண்கள் பெறாத மாணிக்கமும் அதிக மதிப்பெண்கள் பெற்றான் தமிழ்ப்பாடத்திலே ஓரிரவில் பணக்காரனான ஏழைபோல் ஆனாலும் ஏனோ எவருமே போற்றவில்லை இதைக்கண்ட மாணவர்கள் மத்தியிலே என்ன விந்தையென கேள்வியெழ ஆசிரியர் மனது வைத்தால் அற்புதமும் நிகழுமென்று உணர்ந்தனரே ஏனைய பாடத்திலும் இவ்வதிசயம் நிகழுமென எதிர்பார்த்தனரே இதபோன்றே மதிப்பெண்கள் பெற்று மிரள வைப்பானென காத்திருந்தனரே எங்கு இத்திறமையை இதுநாள்வரை மறைத்து வைத்திருந்தானோ யாமறியோம் இன்றுதான் ஆசிரியர் இதனைக் கண்டாரோ என்பதையும் யாமறியோம் இன்னும் சில மாணவர்களையும் இதுபோல காண்பாரோ என்றறியோம் பூனையும் கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போயிடுமோ பழுத்த கனிகள் மரத்தில் பல இருந்தால் பலரது பார்வை அதில் நிற்கும் பள்ளியின் நற்பெயரை மனதில் கொண்டால் நயமது காண்பதில் சிறந்து நிற்கும் காயைக் கனியென சொல்லி புகழ்ந்தாலும் காண்பவர் கண்களெலாம் பழுதன்றோ? நல்லோர் ஒருவருண்டேல் அனைவருக்கும் பெய்யும் மழை என்பார் இவ்வாசிரியர் ஒருவராலே இங்கு மாணிக்கம் மட்டும் உயர்ந்து நிற்பது எதனாலோ?-சங்கர சுப்பிரமணியன்.