கவிதைகள்
“நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கட்டும்” …. கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
இளவயதில் கேட்ட ஒரு சொலவடை
இன்றேன் நினைவில் வருகிறது ஒரு நாளும் பிடிசோறு போடாத உத்தமி இன்று திருவோடு நிறைய சோறிட்டாள் என்றும் அதிகமாய் சோறுபோடும் செருக்கிக்கு இன்று என்னாயிற்று என்பதே நான் கேட்ட சொலவடையாம் ஒரு பிச்சைக்காரன் சொன்னதாக கேட்டதுவாம்அந்த பிச்சைக்காரனுக்கு என்னாச்சு சோறிடாதவளுக்கு என்னாச்சு சோறிடுபவளுக்கும் என்னதான் ஆச்சு சோறிடாதவள் அதிகம் சோறிட்டதோ சோறிடுபவள் சுகமில்லையென கேட்டு அவள் சோறுபோட முடியா நிலையறிந்தே பிச்சைக்காரன் தன்னை புகழ்ந்திடவே அந்த பிச்சைக்காரனுக்கும் சோறிட்டாள் உண்மை நிலையினை நாமறிவோம் என்றுமே சோறிடாதவள் சோறிட்டதும் பிச்சைக்காரன் மேலான பாசத்தாலன்று பிச்சைக்காரன் சோறிடாதவளை புகழ்ந்ததும் சோறிட்டவளை இகழ்ந்ததும் உண்மையல்ல என்பதையும் நாமறிவோம் சோறிடாதவளை புகழ்ந்தால் இனியாவது சோறிடுவாள் என்பது பிச்சைக்காரனின் நப்பாசை சோறிட்டவளை இகழ்ந்தாலும் அந்த உத்தமி செருக்கியாக மாட்டாள் என்றறிவான் பிச்சைகாரனுக்கு சோறே குறி என்பதையும் நாமறிவோம் எது எப்படியோ பிச்சைக்காரனுக்கு சோறு கிடைக்கட்டும் சோறிடாதவள் மனமும் குளிரட்டும் சோறிடுபவளும் சுகமாகி வந்து சோறிடட்டும் நமக்கும் சொலவடை பொருள் புரியட்டும் நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கட்டும்!
-சங்கர சுப்பிரமணியன்.