கவிதைகள்
கோலோச்சி நிற்பதே அத்தாட்சி!… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
பகுத்தறிவுக்கு விதையிட்டதை பகுத்துமே அறிந்திடில்
தொகுத்தது எவ்வமைப்போ எவரோ அல்ல என்றறிவீரே இகத்தில் ஊர்வன பறப்பன நடப்பனவற்றை கடவுளாக்கி வகுத்ததை வழியென வாழ்ந்தால் எவரோ வீடுபேறென்றார் மதங்கள் தோன்றிய காலந்தொட்டு புவியில் மறுத்துரைத்த மாந்தருண்டாம் மாநிலத்தே நட்ட கல்லை தெய்வமென்று சொன்னதை திட்டமாகச் சாடினார் சிரத்தையோடவரும் ஆயிரம் கவிதைகள் இங்கே வடித்தாலும் இதற்கொப்ப உண்மையினை உரைக்க அறிவுக் கண்களை நன்றாயிங்கு திறக்க உதவும் கவிதையை நானுமே தேடினேன் தேடித்தேடி நானும் சோர்ந்திட்டேன் தென்பட்டதில்லை என் கண்ணிலும் இன்றொரு அதிசயமும் நிகழ்ந்ததே என் வாழ்வில் வசந்தமாய் புகுந்ததே அத்தி பூத்தாற்போல் என்று சொல்வதுபோல் பொத்தி வைக்காது மெய்ப்பொருள் வைத்து நெத்தியடிபோல் நெறிதனை நின்றுரைத்து இத்தரையிலும் ஓர் இலக்கினைச் செய்தார் பாலைவனத்தில் ஒரு பசுஞ்சோலையாய் உள் உணர்வை சொல்லும் வேலையாய் சொல்லாட்சியில் நற்கவிதையும் செய்தே கோலோச்சி நிற்பதுவே இங்கு அத்தாட்சி!-சங்கர சுப்பிரமணியன்.
சிறப்பு வாழ்த்துகள்
மிக்க நன்றி