“ஆடைகள் பூட்டுவோம் வாரீர்” …. கவிதை …. சோலச்சி.
பெண்கள் குளிப்பதை அவன் கண்டு களித்த போதே
ஆணவச் சிரிப்பில் ஆடைகளை அள்ளிச் சென்ற போதே
கண்களைத் தோண்டி கை விரல்களை நறுக்கியிருந்தால்
திரௌபதி சேலையை அவிழ்த்திட துச்சாதனனும் அஞ்சியிருப்பான்…!
அவனைத் தூக்கி கொஞ்சியதாலே – அவன்
கடவுளும் ஆகிவிட்டான் நம் கண்களை குத்தி விட்டான்..!
வாள்விழி கண்களை கொண்டிருந்தும் – துச்சனை
வெட்டி வீழ்த்திட மனமின்றி இளகியதாலே – அன்று
ஆடைகள் அவிழ்க்கப்பட்டோம்
அஞ்சி நடுங்கியே ஒடுக்கப்பட்டோம்..!
எத்தனை காலம் தான் பூமி போலவே
பொறுத்தே கிடப்பது பொங்கி எழுவீரே..!
நீலிக் கண்ணீர் விடுவது முதலைக்குணம்
பெண்ணைப் போதையாய் நினைப்பது ஆரிய மனம்
வதம் செய்திட வாரிர் தோழியரே…!
கற்பு நெறி என்பது பொதுவென்றே – நாம்
கற்பிக்க மறந்து போனதாலே
தீயிக்குள் தள்ளப்பட்டாள் சீதையுமே – அவனைத்
திருப்பி அடித்து தீயினுள் தள்ளி இருந்தால்
அவன் அன்றே செத்துப் போயிருப்பான்
ஆண்டுகள் கடந்தும் மணிப்பூரில் எப்படி முளைத்திருப்பான்..?
பொய்யும் புரட்டையும் புனிதம் என்றே
பொல்லாத விதிகளை வேதம் என்றே
இல்லாத சாஸ்திரத்தை தூக்கிக்கிட்டு
இனி எவன் வந்தாலும் எரித்து விடு..!
இன்று அம்மணமாய் நாடு அலையுது பாரீர்…
நின்று நீரைப் பொழிந்து தென்னை ஈக்கி நனைத்து
எத்தர்களை அடித்து ஒழித்து
அன்னை பூமிக்கு ஆடைகள் பூட்டுவோம் வாரீர்..!
– சோலச்சி.
அருமை வாழ்த்துகள்
அருமையான, ஆழமான வரிகள்.
கவிதையா இல்லை துப்பாக்கியா?
நெஞ்சைத் துளைக்கிறது…
மிகச் சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள பெண்ணுரிமை காக்கும் சமூக நீதி கவிதை…..
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒழிய இதுபோன்ற சிறந்த படைப்புகள் வெளிவருவது மிக மிகச் சிறப்பு….வாழ்த்துகளும் நன்றிகளும்💐💐💐🙏🙏🙏
மானிட சமூகத்திற்கு எழுச்சியூட்டும் சிறந்த கவிதை. வாழ்த்துகள்.
சிறப்பான கவிதை.