கவிதைகள்
படைப்பதெலாம் எதற்காக சொல்வீர்!… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
தாயன்புக்கிங்கு விலையுண்டா என்றால்
இல்லை என்றே பதிலாய்ச் சொல்வேன் தமிழ் தொண்டுக்கு விலையுண்டா எனில் அதற்கும் சொல்லலாமா இல்லையென்று வாடகைத்தாய் விலையாக இருப்பதால் வளர்க்கும் பாலுக்கு விலையின்றாமோ வழக்கமெலாம் வாடிக்கையாகும் போதில் வழக்குகளாய் மாறுவதும் சத்தியமன்றோதமிழில் நூல் எழுதி வெளியிட்டாலதை
வியாபாரம் என்றும் சொல்கின்றார்கள்
தமிழில் படம் எடுத்து திரையிட்டாலும் பணம் சம்பாதிக்கும் தொழில் என்பார் தமிழ் தினசரி இதழை தொண்டென்றால் அதையும் ஒரு தொழிலாகவே சொல்வர் தமிழால் வளரும் தொலைக்காட்சி யாவும் கட்டணமாய் பெறுவதும் தொழிலென்பர் தமிழில் இசையமைப்பது பாடுவதெலாம் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில்தான் தமிழுக்காய் பேசி அதன் புகழ் பரப்புவதும் அதற்காய் பெறும் பணமும் தொழிலாகும் வருவாய்க்கென எவரும் சொல்லவில்லை புகழுக்கென்று யாருமே சொல்வதில்லை விருதுகள் பெறவென்றும் சொல்வதில்லை வீணாகவும் பலர் எதையும் செய்யவில்லை பொழுது போக்காக இங்கு படைப்பதுண்டு ஊடகங்கள் கிடைப்பதால் படைப்பதுண்டு என்னாலும் முடியுமென்று படைப்பாருண்டு எதையெதையே படைப்பாய் சொல்வதுண்டு அப்படி ஒன்றுமில்லையென சொன்னாலும் தொண்டென பலரிங்கே சொல்கின்றனரே இவர்களை வைத்து தமிழ் வளர்கின்றதோ இவர்கள் வளர்வது தமிழால் இல்லையோ பந்தயத்தில் ஓடும் திறனைவைத்து குதிரை வென்றிடுமா என்றறிவர் பந்தயம் கட்டுபவர் படைப்பை வைத்தே உணரப்படுவர் இங்கு படைப்பதும் தமிழ்த் தொண்டுக்கா என்று!-சங்கர சுப்பிரமணியன்.