கவிதைகள்
நிலையாமையறியா நிலையற்ற மனிதா!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
வள்ளுவன் சொன்ன நிலையாமை பற்றி
சிலையாயினர் சிறிதளவும் எண்ணாமல் உணர்ந்தேன் நானுமதன் தத்துவத்தை வாழ்விலிருந்தே அதைக் கற்றறிந்தேன் பிறந்தவீடும் எனக்கு சொந்தமில்லையே என்னைப் பெற்றவயிறும் இன்றில்லையே வளர்த்த தந்தையும் பாதிவழி வரையிலே காதறுந்த ஊசியும்வரா கடைத்தெருவிலே கற்றுக்கொடுத்த ஆசான் உயிரோடில்லை பற்றுக் கொண்டோரில் பாதிகூட இல்லை வற்றிப்போன உடலோ வனப்புடன் இல்லை சுற்றித்திரிந்த நாட்களும் சுகம் தரவில்லை உண்டஉணவு ஒழுங்காய் செரிக்வில்லை கண்டகாட்சிகள் எதுவும் நினைவிலில்லை முண்டமாய் வாழ்வும் முடிவற்றுப் போகுதே அண்டமதில் எதை நான் எடுத்து செல்வேன் வந்தாரைத் தாங்கும் வளமானமண் இதுவும் எந்நாளும் தாங்காது இருளுக்குள் ஆழ்த்தும் அந்நாளை எண்ணி அறியாமல் இருப்போரே வந்திடுமா பொன் பொருள் மனை உம்மோடு! -சங்கர சுப்பிரமணியன்.