கவிதைகள்
சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை!…. ( கவிதை ) … சங்கர சுப்பிரமணியன்.
தந்தனதத்தன தைய்யனத்தத்தன என
தோன்றிற்று பாடலுக்கு நல்ல ஊற்று சிப்பி இருக்கு முத்தும் இருக்குதென ஊற்றில் வரிகள் பிறந்தன கவிஞரிடம் எத்தனைக் கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றேதான் எனக்கு அவர்கருத்து தந்தன ஓரூற்று என்னுள் கருத்தாய் பிறந்தது கவிதை எத்தனை வீடுகள் வாங்கி சேர்த்தாலும் அத்தனையிலும் நித்திரை ஒன்றில்தான் வீடுகள் நம்மோடு வருவதில்லை ஆனால் நித்திரை மட்டும் நம்மைத் தொடர்கிறது எத்தனை அணிகலன்கள் வாங்கினாலும் அவற்றுள் இருப்பதெலாம் பொன்னாகும் பொன்னை நம்மோடு அனுப்பிவைப்பரோ அவற்றை பார்க்க நம்மால் முடிந்திடுமோ எத்தனை பெண்களை நாம் சந்தித்தாலும் அத்தனைபேரும் ஒருதாய்க்கு ஈடாகுமோ தாயன்புக்கு இணையில்லை என்றாலும் அவ்வன்பை இறுதியிலுணர இயன்றிடுமா இத்தனையும் இயல்பாய் தெரியும்போதிங்கு மனிதரும் ஓய்வுன்றி எதைதோக்கி ஓடுகிறார் சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை – உன் சிந்தையில் தான் பேதமென நானறிந்தேன்! -சங்கர சுப்பிரமணியன்.