கவிதைகள்

அவளொரு வெளிச்சம் போன்றவள்!… ( கவிதை ) ….. வித்யாசாகர்…. குவைத்.

யிரே..  யார் நீ? தெரியாதுதெரிய நான் முயலவில்லைஎனக்குப் பயணம்; இந்தக் காற்றைப்போலவெளிச்சத்தைப் போலகடல் பாயும் நதியாக நீள்கிறது.இடையே கேள்வி இல்லைநீ யாரென்று.சிந்திக்கவேயில்லைநீ யாரென்று.எனக்கு நீ பெண்ணாக இருக்கிறாய்ஆணாகவும் இருக்கிறாய்உறவாக இருக்கிறாய்நட்பாகவுமிருக்கிறாய்,காதலூருகிறது; அன்பு நிறைகிறது;உயிர் நிறைக்கிறாய் என்னுள்.நான் தேடாமலேகாணுமிடமெல்லாம் காண்கிறேன் உன்னைபிறகு, எங்கு நான்; நீ யாரென்று கேட்க ?காற்றைச் சுவாசிக்கும்லப்டப் போலஉள்ளே இசைக்கிறேன் உன்னைஉயிர்வரை தொடுகிறாய்வீணையைப்போல மீட்டுகிறேன்உள்ளே ஆனந்த ஒலி யெழுப்புகிறாய்பரவசம் ஒளிர்கிறது எங்கும்எல்லாம் நினைவில் நிகழ்கிறதுஉணர்வில் தெரிகிறதுகனவு இல்லைபொய் இல்லைஅப்பட்டமாய் நிகழ்கிறது; உன்மத்தம் கொள்கிறாய்ஏதோவொன்று மறைந்துஏதோ ஒன்றாக மாறுகிறதுஆனால் அது நீயில்லை, அவளில்லை, அவன் மட்டுமுமில்லைஎல்லோரிடமும் நிகழ்கிறது உனக்கான அன்பு;மழை சோவென்று பெய்யும் குளுமைகற்பூரம் எரிந்து சுவாலை அசையும் நளினம்ஒரு சிநேகத்தோடு பூனை பார்க்கும் கனிவுநாயொன்று வாள் குழைத்தும்ம்.. ம்ம்மென்று துள்ளும் நேசம்காற்றசைந்து தரையுதிரும் பூவிதழின் தொடுதல்வானம் வெளுக்கத்துவங்கும் காலையில்இலையுதிர்க்கும் பனித்துளி ஈரம்கடல் தள்ளும் நுரை வெடிக்கும் சத்தம்கரையும் காகம்; பறக்கும் கிளிகள்; எங்கோ பேசிக்கொண்டேயிருக்கும்ஊர்க்குருவியென எல்லாம்நினவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது உன்னைஉன்னிடம் மனம் பேசுகிறதுஅதுவாக நீரில் ஊரும்ஒளி போல்உணர்வுள் அணி செய்கிறதுஅழகு பூக்கிறதுஅன்பின் உயிர் சத்தம் கேட்கிறதுஉனக்குள்ளும்எனக்குள்ளும்ஏதோ நிகழ்கிறதுநீ யார்?நீ நதியாகிறாய், இசையாகிறாய்வண்ணம் தெளிக்கிறாய்வானில் பறக்கிறாய்மண்ணுள் துளிர்க்கிறாய்மழையில் நனைகிறேன் நீ நனைகிறாய்பேசுகிறேன் நீ பேசுகிறாய்யார் யாரோ போல் தெரிகிறாய்எங்கும் அன்பு எதிலும் அன்புஅன்பொன்றே வேதம் அன்பொன்றே அழகுஅன்பு மட்டுமே எல்லாம்போல்;நீயும் அப்படித்தான்அன்பின் ஆழம் நீஅன்பின் அழகு சொட்டும்நீர்த்துளி நீஒரு காற்ருக்குமிழ் வெடித்து சிதறும்மாயமற்ற வண்ண யெழில்;கொஞ்சம் நில்லேன்,எப்படியோ,உணர்வின் உயிரிழை போல் இசையும்சில உன் நினைவை சுமக்கமனம் மறுப்பதேயில்லைகொஞ்சமும் சலிப்பதுமில்லைகாதல் நிகழ்ந்துகொண்டே யிருக்கிறதுஉன்னிடம் அன்பு தீர்வதே யில்லை;ஏன், சிலரிடம் இப்படி ?சிலரைக் காண்கையில் மட்டும்ஏனிப்படி ?ஏன் இது நிகழ்கிறது? அறிவு சிந்திக்கத்தான் செய்கிறதுமனம் தான், மனம் தான், மனம் அது தான்அது அப்படித்தான் போலும்,அன்பின் தீ கனன்று எரியும் கிணறது மனம்பேராழக் கடல்; அன்பை கடல் அணைப்பதேயில்லைஅன்பு நீளும்…இந்தக் காற்றும்வெளிச்சமுமாய் நீளும்…நீளட்டும்நீ வா; போவோம்நீயும் நானும் அந்தக் காற்றோடிருப்போம்வெளிச்சத்தோடிருப்போம்வானும் மண்ணும் போலஇப் பிரபஞ்சமெங்கும் நிறைந்திருப்போம்; நீக்கமற!!

——————————————————-

வித்யாசாகர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.