கவிதைகள்
அப்பா மறைவின் தாக்கம்!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
அப்பா
ஓட வைத்தாய்
அப்பா என்னை
வாழ்வில் ஓடவைத்தாய்
அப்பா
ஓட வைத்தாய்
அப்பா என்னை
வாழ்வில் ஓடவைத்தாய்
வாழ எனக்கு
வழிகாட்டல் இன்றி
வாழ எனக்கு
வழிகாட்டல் இன்றி
மீளாத்துயரில்
நான் ஆழ்ந்த போதும்
மீளாத்துயரில்
நான் ஆழ்ந்த போதும்
வழிதேட வைத்தாய்
விழி நீர் சிந்தாமல்
வழிதேட வைத்தாய்
விழி நீர் சிந்தாமல்
அப்பா
ஓட வைத்தாய்
அப்பா என்னை
வாழ்வில் ஓடவைத்தாய்
நேர்மை உன் பணியில்
பலர்கூற கேட்டேன்
நேர்மை உன் பணியில்
பலர்கூற கேட்டேன்
தேர்போலே நின்றாய்
பணியில் சிறந்தாய்
தேர்போலே நின்றாய்
பணியில் சிறந்தாய்
அப்பா
ஓட வைத்தாய்
அப்பா என்னை
வாழ்வில் ஓடவைத்தாய்
உயர்ந்த எம் வாழ்க்கை
சிறந்துமே செல்ல
உயர்ந்த எம் வாழ்க்கை
சிறந்துமே செல்ல
நலிவுற்று நோயால்
எமைவிட்டு சென்றாய்
நலிவுற்று நோயால்
எமைவிட்டு சென்றாய்
அப்பா
ஓட வைத்தாய்
அப்பா என்னை
வாழ்வில் ஓடவைத்தாய்
கல்வி நான்கற்க கலங்கித் தவித்தேன்
சொல்லொனா துயரை நான்கண்டேன்
கல்வி நான்கற்க கலங்கித் தவித்தேன்
சொல்லொனா துயரை நான்கண்டேன்
சென்ற இடமெல்லாம் சீர்கெடலானேன்
மன்றாடி நானே வாழ்வைச்சீர்செய்தேன்
சென்ற இடமெல்லாம் சீர்கெடலானேன்
மன்றாடி நானே வாழ்வைச்சீர்செய்தேன்
அப்பா
ஓட வைத்தாய்
அப்பா என்னை
வாழ்வில் ஓடவைத்தாய்
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
விந்தை எனக்கு அவ்வாய்ப்பில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
விந்தை எனக்கு அவ்வாய்ப்பில்லை
நிந்தை செய்யேன் நீ இல்லையென்று
தொத்தரவை விட்டுச் செல்லவில்லை
நிந்தை செய்யேன் நீ இல்லையென்று
தொத்தரவை விட்டுச் செல்லவில்லை
அப்பா
ஓட வைத்தாய்
அப்பா என்னை
வாழ்வில் ஓடவைத்தாய்
மண்ணில் பிறந்து மரித்த எவ்வுயிரும்
கண்ணீர் சிந்தி அழுதாலும் வருமோ
மண்ணில் பிறந்து மரித்த எவ்வுயிரும்
கண்ணீர் சிந்தி அழுதாலும் வருமோ
என் பிள்ளைக்கு இன்று நானிருக்க
உன்பிள்ளை நீயின்றி இருந்தேனே
என் பிள்ளைக்கு இன்று நானிருக்க
உன்பிள்ளை நீயின்றி இருந்தேனே
அப்பா
ஓட வைத்தாய்
அப்பா என்னை
வாழ்வில் ஓடவைத்தாய்
நடுக்கடலில் துடுப்பில்லா படகானேன்
வடுக்களே வாழ்வில் கண்டவனானேன்
நடுக்கடலில் துடுப்பில்லா படகானேன்
வடுக்களே வாழ்வில் கண்டவனாவேன்
உன்மறைவால் நான் துயரம் அடைந்தேன்
என்வாழ்வை நான் செதுக்கவும் செய்தேன்
உன்மறைவால் நான் துயரம் அடைந்தேன்
என்வாழ்வை நான் செதுக்கவும் செய்தேன்
அப்பா
ஓட வைத்தாய்
அப்பா என்னை
வாழ்வில் ஓடவைத்தாய்
பொன் பொருள் நிலமென வைக்கவில்லை
என்னைக் கடனாளியாக்கி செல்லவில்லை
பொன் பொருள் நிலமென வைக்கவில்லை
என்னைக் கடனாளியாக்கி செல்லவில்லை
வளமாக இங்கே வாழ்கின்ற இந்நாளில்
உளமாற நினைக்கிறேன் நீயில்லையே
வளமாக இங்கே வாழ்கின்ற இந்நாளில்
உளமாற நினைக்கிறேன் நீயில்லையே
அப்பா
ஓட வைத்தாய்
அப்பா என்னை
வாழ்வில் ஓடவைத்தாய்
அப்பா
ஓட வைத்தாய்
அப்பா எஎன்னை
வாழ்வில் ஓடவைத்தாய்
-சங்கர சுப்பிரமணியன்.