கவிதைகள்
வேரினில் நீரூற்ற வா வேலவா!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
தள்ளி அங்கேயே நிற்கும் வேலவா
வள்ளியை மணம் முடிக்க இங்கு வா பிள்ளயாய் அன்று நின்றவனே நீ வா பிரணவம் சொன்னால் போதாது வா கூப்பிடுகிறார் உன்னை ஓடோடி வா எப்பாடு பட்டாலாவது நீயும் இங்கு வா கூப்பாடு போட்டப்போ வராத நீயும் வா மூப்புவேடம் போட்டவனே இங்கே வா ஒன்றிற்கிருவரை மணந்து காட்டிய நீ வா என்றைக்கும் ஒருத்தியொடு நான்வாழ வா குன்றிலாடும் குமரனே குறமகளுடனே வா அன்றே மறந்திட்டோம் அதை மறந்து வா கூர்வேலை எறிந்து பகையறுப்பவனே வா யார் மீதும் வேலறியாமல் நின்றவனே நீ வா பார் மீது உமைத் தொழுவோம் இங்கே வா ஊரை மறக்கவைத்தாலும் உற்றவனே வா தேர்மீது பவணிவந்து தேவர் பகையறுக்க வா யாரெங்கு இருக்கிறார் என்று சொல்லவே வா பாரினில் இங்கு கேட்கிறார் பறந்திங்கு நீ வா வேரினில் நீரூற்றி வீறோடு தழைத்திடவே வா-சங்கர சுப்பிரமணியன்.