கவிதைகள்
குடத்தோடு போற மச்சாள்!… ( கவிதை ) …. இவன்_பாவலன்.
குடத்தோடு போற மச்சாள்
கூட நான் வரவா
தனியே போறவளே
துணைக்கு நான் வரவா
தங்கமே தனிய
போகாதே
தயவாக நான்
சொல்லுறன்
காலம் கெட்டு
போய் கிடக்கு
கயவர் மலிந்த
நேரமிது
நான் கூட
வந்தால்
நல்ல நேரம்
இது
உன் இடை
நோகாமல்
நான் சுமப்பேன்
உன் பாரம்
வழித்துணையாய்
நாலு கதை பேசுவேன்
பொழுதானாலும்
பொடி நடையாய்
வீடு வரை வந்து விடுவேன்
உற்றவரும் ஊரும்
பார்த்தால்
மைத்துணியே
மச்சான்
மாங்கல்யம் கூடிவிடும்
மாமா கண்டு விட
மருமகனே வாடா
மாமா நான் கை பிடித்து தாறன்
மச்சிணிச்சி உனக்குத்தான்
மாலை மயங்கும்
நேரத்தில்
மங்கல் விளக்கில்
எங்கள் மாங்கல்யம்
கூடு திரும்பும்
பறவைகள்
இசைக்க
மதிய சோற்றில்
நான் குளைந்து ஊட்ட
நாங்கள் கை பிடிப்போம்..