கவிதைகள்
பாட்டி சொன்ன கதை!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
அன்பு ஆசை காதல் என்ற மூன்றுக்கும்
அடிப்படை வேறுபாடறியா வயதெனக்கு அன்போடு அரவணைத்த பாட்டியும் அவள் கேட்டறிந்த கதை சொன்னாள் என்னிடம் எத்தனையோ அரசர் வந்து முயன்றனர் அத்தனை பேராலும் தூக்கமுடியா வில்லை மெத்தனமாய் வந்து தூக்கி ஒருவர் ஒடிக்க சித்திரமாய் நின்றவள் சிந்தையலங்கு காதல் எனக்கோ வளைக்கமுடியா வில்லொடித்தது நினைக்க வியப்பானதே அசாத்திய வீரமாய் நினைத்தேன் பளுதூக்கும் போட்டியை நான் அன்றொரு விதியை வரையறுக்கவில்லையா கதை சொன்ன பாட்டியிடம் கேட்கவில்லை இதைக்கேட்கும் வயதும் அப்போது இல்லை விதையை நிலமறிந்து ஊன்றிடல் வேண்டும் ஏதுமறியா வயதில் ஊன்றினாலது கதையாம் வீரத்தை சொல்ல முயன்றாளா எனது பாட்டி தாரமாய்வர நின்றவள் காதலை சொன்னாளா நூறு கதைகள் இதுபோல் கேட்டேன் அன்று சீராய் புதிதாக தோன்றின பற்பலவும் இன்று! -சங்கர சுப்பிரமணியன்.