கவிதைகள்
மாற்றாயும் காட்டுமோ?…. ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
மடையர்தம் மடமைகூறி நீக்க முற்படின்
கேடுவந்து சூழும் என்பதனை அறிந்த நீ மடமையை ஊக்குவிப்பார் அறியாயோ மூர்க்கரென அறிந்திடுவாய் நன்னெஞ்சே தீயில் கையைவைத்தால் சுடும் என்றேன் தீயென எழுதி கைவைத்த அறிவாளியும் சுடவில்லை என்று சொன்னால் அவரை மடையரென கூறாது அறிவாளி என்பதா உலகை சுருட்டி கடலுக்குள் ஓடமுடியுமா அந்த கடலும் உலகில்தான் உள்ளதெனில் நம்மை தரம்தாழ்ந்தும் நிந்திப்பார் எனில் தரம்தாழ்வது யாரென தரணி நன்கறியுமே பண்புடனே பலவற்றை பகிர்கின்ற போதிலே பண்பறியா மனிதருக்கு பழிப்பதவர் குணம் விண்வெளியில் நீந்தி உலாவரும் ஆதவனை மண்நின்று கல்லெறிய மகிமை குறையுமோ நாட்டில் நடப்பதை நற்றமிழில் சொன்னால் பூட்டிவைத்தது அம்பலமாதலால் புலம்பலோ பாட்டி சொன்ன கதையிலும் உண்மையுண்டு தீட்டிவைத்த ஓவியம் மாற்றாயும் காட்டுமோ? -சங்கர சுப்பிரமணியன்.