நிகழ்வுகள்
பிரித்தானிய தமிழீழ சொந்தங்களே!
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 33ஆவது நினைவு தினத்தை நினைவு கூறுவதற்க்கு தாயகத்தில் எமது மக்களிற்க்கு சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு பல இடையூறுகளை ஏற்படுத்தி வன்முறை கொண்டு தடுத்து வருவதை யாவரும் அறிவோம்.
ஆக தாயக சூழலை கருத்தில் கொண்டு புலம்பெயர் மக்கள் கடமையாற்ற வேண்டிய சூழலை காலம் எமது கைகளில் தந்துள்ளது.
நாம் எவ்வாறு செயற்பட போகிறோம்?
எதிர்வரும் 25/09/20 வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணியளவில் பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பிரதமர் பணிமனையில் தமிழர்களாக அவரவர் முடிவின் அடிப்படையில் தன்னெழுச்சியாக ஒன்று திரல்வோம்.நாம் எமது நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அழைபேசியூடாக தகவல்களை பறிமாறிக்கொள்வோம்.ஒன்று கூடுவதன் தேவையையும் அவசியத்தையும் தெளிவுபடுத்துவோம்.
நிகழ்விற்க்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றவேன்டும் என்பதை தெளிவு படுத்துவோம்.
மேலும் நிகழ்விற்க்கு வரும் உறவுகளிடம் நாம் மெழுகு வர்த்தியையும் இயலுமான வரை திலீபன் அண்ணாவின் படங்களையும் எடுத்து வருமாறு வழியுறுத்துவோம்.
சரியாக மாலை 4.12 மணிக்கு அங்கு வரும் மக்களை திலீபன் அண்ணாவின் படத்திற்க்கு விளக்கேறும்படி(நாம் எடுத்து வரும் படத்திற்க்கு) தகவல்களை பரிமாறி கொள்வோம்.ஆறு ஆறு நபர்களாக நாம் பொது வெளியில் சமூக இடை வெளியை பின்பற்றி நிற்பதாவது சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.
மாலை 4.12 மணி ஏன்.
மாலை 3மணியலவில் மக்கள் வருகை அமைந்தாலும் வரக்கூடியமக்கள் வரும் வரை சற்று தாமதித்து 4.12 ( அதாவது 12 நாட்களாக தன்னை எமது இனத்தின் விடுதலைக்கா உருக்கிய நாட்களை நினைவுபடுத்தும் வகையில் 4.12) திலீபன் அண்ணாவின் படத்திற்க்கு தீபமேற்றி மலர் வணக்கம் செலுத்துவோம்.முடியாது என்றால் முடியாது முடியும் என்றால் முடியும்.மேலும்
தாயகம் நோக்கி பயணிக்கும் அனைத்து உறவுகளும் மிகவும் காத்திரமான நேரத்தில் காத்திரமான பணிக்காக ஒருங்கினைந்து தாயக மக்களிற்காக குரல் கொடுப்பதாவது!! மக்கள் புரட்ச்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்னும் வேதத்தை கற்றுதந்த திலீபன் அண்ணாவின் மீது உறுதி எடுத்துகொள்வோம்! வெல்வது தமிழர்களாக இருப்போம்.
இயன்ற வரை இச் செய்தியை மக்கள் மத்தியில் எடுத்து சென்று வெள்ளிகிழமை நடைபெற இருக்கும் நினைவேந்தல் நிகழ்விற்கு பலம் சேர்குமாறு அன்புரிமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.!
நன்றி.