Featureநிகழ்வுகள்

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மே 18 . 2020

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மே 18 2020

இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 11 வது ஆண்டுகளின் நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம்.

ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம்.

கொடிய போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் கடந்தும், நீதிக்காக எமது மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்து, மறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அன்பான உறவுகளே,

எமது மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு இதுவரை நாளும் பரிகார நீதி கிடைக்காத நிலையில், மிகுந்த சலிப்பும் ஏமாற்றமும் அடைந்துள்ள நிலையில், எமது விடுதலைப் போராட்டத்தோடு பயணித்து மரணித்துப்போன எமது மக்களையும் எமது மாவீரர்களையும் நினைவுபடுத்திக்கொள்வோம்.

நீதிக்கான குரலாக அனைவரும் ஒன்றுபட்டு எமது உறவுகளை நெஞ்சங்களில் நினைவேந்தி நினைவுகூருவோம். தற்போதைய கொறானா வைரஸ் என்ற தொற்றுநோயினால் ஏற்பட்ட இடர்கால நிலையால், அனைவரும் ஒன்றுபட்டு நினைவுகூர முடியாத காலச்சூழல் இல்லாத நிலையில், அனைவரும் தனித்திருந்து ஒவ்வொரு வீடுகளிலும் எம் உறவுகளை நினைவில் இருத்தி சுடரேற்றி நினைவுகூருவோம்.

இணைய வழியாக ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

காலம்: 18 – 05 – 2020 Monday 7pm – 8pm (AEST), 6.30pm – 7.30pm (SA), 5pm – 6pm (WA).

Zoom Link: http://tiny.cc/may18au2020 or https://us02web.zoom.us/j/89623509709 

Facebook Live: http://facebook.com/tccaustralia

தொடர்பு: 0401 842 780 (TCC NSW), 0433 002 619 (TCC VIC) 0421 514 004 (ATC WA) 0469 016 416 (ATC QLD)

இவ்வண்ணம்,
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு – அவுஸ்திரேலியா

   

Youtube Link: https://www.youtube.com/watch?v=RHIRwKAt-mI 

—————————-

“முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்”

கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் நாள் வரையான காலப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை “முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக” தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தேசமெங்கும் பரவியிருக்கும் தமிழ் உறவுகளால் மே12ம் நாள் இந்நினைவேந்தல் வார நிகழ்வுகள் தொடங்குகின்றது.

 

மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.