உலகளாவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு – 18 மே 2020
ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு (US TAG), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), கனடிய தமிழர் பேரவை (CTC), அவுஸ்திரேலிய தமிழர் பேரவை (ATC), அயர்லாந்து தமிழர் பேரவை (ITF), அமைதிக்கும் நீதிக்குமான ஒற்றுமை குழு – தென்னாப்பிரிக்கா (SGPJ-South Africa) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள், மாவீரர்கள் உயிர்களை காவுகொண்ட முள்ளிவாய்க்கால் 11 வது வருடாந்த நினைவேந்தல் நிகழ்வு.எதிர்வரும் மே 18ம் திகதி 2020 பல்வேறு ஒளி, ஒலி அலை தொழிநுட்பம் மூலம் உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட உள்ளது.
இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் இந்த நேரடி நிகழ்வு ஐக்கிய இராச்சியத்திலும், அயர்லாந்திலும் சரியாக பிற்பகல் 5 மணிக்கும் ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் கிழக்கத்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கும், அவுஸ்திரேலியா சிட்னியில் மே 19ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கும் நடைபெறும். நேர வித்தியாசத்தை கவனத்திற்கொண்டு அவுஸ்திரேலிய நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை அவுஸ்திரேலிய நேரம் பிற்பகல் 7மணிக்கும் 8 மணிக்கும் இடையில் நடைபெற்ற ஒளிப்பதிவாக இருக்கும்.
உலகளாவிய இந் நிகழ்வு ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் அவுஸ்திரேலியா ,ஐக்கிய இராச்சியம் ,கனடா ,அயர்லாந்து ,தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் உலகின் பிற இடங்களில் எல்லாம் காவு கொள்ளப்பட்ட இன்னுயிர்களை நினைவுகூர்ந்து அனுஷ்டிக்கப்படும். இதன்பின் முள்ளிவாய்க்கால் உட்பட தமிழின அழிப்பின் பல்வேறு கட்டங்களில் பலியெடுக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செய்யும் வகையில் தமிழர் வாழும் தேசமெங்கும் அவர்களுக்கு மலர்தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்படும்.
வருடம் தோறும் மே மாதம் 18 ஆம் திகதி சரியாக 18:18 மணிக்கு உலகத் தமிழர்கள் தீபம் ஏற்றி “தமிழினப் படுகொலை நினைவு நாள்” எனும் உலகளாவியரீதியில் முன்னெடுக்கப்படும் பரப்புரைக்கு நாங்கள் பூரண ஆதரவு தருகின்றோம். இது குறித்த மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
இதனைத் தொடர்ந்து ATC, BTF, CTC, ITF, SGPJ-SA, USTAG அமைப்புகளின் பிரதிநிதிகள் யுத்தத்தில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கு நீதி வேண்டியும், பொறுப்புக்கூறலை வற்புறுத்தியும், உண்மைகளைக் கண்டறிந்து பாதிப்புக்குள்ளான தமிழினத்திற்கான பரிகார நீதி தேடும் பாதையில் உலக நாடுகளை இட்டுச் செல்லும் வகையிலும் உரை நிகழ்த்துவார்கள். அங்கு இடம்பெற்ற கொடுமைகளை வெளிப்படுத்தும் பாடல்கள், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் பல நாடுகளிலிருந்து இடம்பெறவுள்ளன.
புலம்பெயர் தேசங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் கலந்து கொள்ளும் வகையில் இணைய இணைப்புக்கள் விரைவில் அறியத் தரப்படும். இந்த நிகழ்வில் இணைந்து கொள்ள விரும்புவர்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள கீழே தரப்பட்டுள்ள அமைப்புகளுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
Contact details follows:
Mr. M. Manokaran
Chairman – Australian Tamil Congress
T: +61 300 660 629
Email: Mano_manics@hotmail.com
Website: www.
australiantamilcongress.com/ en/ Twitter: @austamilcongres
Mr. V. Ravi Kumar
General Secretary – British Tamils Forum
T: +44 (0) 7814 486087
Email: news@
britishtamilsforum.org Website: www.
britishtamilsforum.org Twitter: @tamilsforum
Mr. Sivan Ilangko,
President – The Canadian Tamil Congress
T: +1(416) 240 0078
Email: President@
canadiantamilcongress.ca Website: https://www.
canadiantamilcongress.ca Twitter :@ctconline
K. Sutharsan
Irish Tamils Forum (ITF)
T: 00353 899592707
irishtamilsforum@gmail.com
Pragas Padayachee
Solidarity Group for Peace and Justice in Sri Lanka (SGPJ– South Africa)
Mr. S. Seetharam
President – United States Tamil Action Group (USTAG)
(formerly USTPAC)
T: +1(202) 595 3123
Email: Seetha73@hotmail.com
Website: www.ustpac.org
Twitter: @UstpacAdvocacy