பாண்டிருப்பில்; வீடு வீடாகச்சென்று மருத்து நீர் வழங்க நடவடிக்கை!.. செ.துஜியந்தன்.
கல்முனை பிரதேசத்தில்’ உள்ள இந்த ஆலயங்கள் ஊடாக வீடு வீடாகச் சென்று மருத்துநீர் வழங்குவதற்க்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி பாண்டிருப்பு கிராமத்திலுள்ள வீடுகளுக்கு மருத்துநீர் விநியோகிக்கப்படும் என பாண்டிருப்பு விளையாடடுக்கழகத்தின் தலைவர் லயன் எஸ்.சிறிரங்கன் தெரிவித்தார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி முன்னிரவு 7மணி 26 நிமிடத்தில் புதிய சார்வரி வருஷப்பிறப்பு பிறக்கவுள்ளது. இதனையிட்டு இந்துக்கள் மருத்து நீர் வைத்து நீராடுவது வழக்கமாகும். இம்முறை கொரோனா தொற்றக்காரணமாக ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ளதினால் ஆலயங்களுக்குச் சென்று மருத்து நீரைப்பெறமுடியாத நிலையில் மக்கள் உள்ளனர். இதனையிட்டு அம் மருத்து நீரை வீட வீடாகச் சென்று வழங்குவதற்க்கு பாண்டிருப்பு விளையாட்டுக்கழக இளைஞர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய பிறக்கவுள்ள பதிய சார்வரி வருஷப்பிறப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு கல்முனைப்பிரதேசத்திலுள்ள அனைத்து இந்து ஆலயங்களின் நிர்வாகசபையினர் மற்றும் குருக்கள் ஆகியோருக்கு பாண்டிருப்பு விளையாட்டுக்கழகம் விநியோகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.