Featureநிகழ்வுகள்
தமிழ் இளையோர் அமைப்பால் சிறப்பாக நடத்தப்பட்ட ஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020
இளந்தளிர் நிகழ்வு தமிழ் இளையோர் அமைப்பால் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் முதலாக நடைபெற்று பின்னர் 2006இ 2007ம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டு எமது தேசியப் போராட்டம் பின்னடைவை சந்தித்த பின்னர் தமிழ் இளைளோர் அமைப்பு, இலங்கை அரசாங்கத்தினால் நிறைய சவால்களை சந்தித்த போதும் அனைத்திற்கும் முகம்கொடுத்து சவால்களை சமாளித்து, 2011இ 2015ம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டது.
இவ் ஆண்டு சிறப்பு 15வது ஆண்டாக இளந்தளிர் இடம்பெற்றது. தலைவரின் சிந்தனையை மனதில் கொண்டு ‘ஈழத்தின் விதைகள்’ எனும் பொருளைவைத்து நடாத்தப்பட்டது. ‘‘இலட்சிய விதை வளர்த்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.’’ என்ற தலைவரின் கூற்றை மெய்யாக்கும் வகையில் தமிழ் இளையோர்கள் இளந்தளிர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியாவால் இந்நிகழ்ச்சி பங்குனி மாதம் 15ம் திகதி இல்பேர்ட் (Ilford) நகரில் நடைபெற்றது. சிறப்பு விருந்திரனாக யாழ்ப்பாண மண்ணில் சுதந்திரன் பத்திரிகை வந்த காலம் தொட்டும் ஈழநாடு போன்ற பத்திரிகைகளிலும் தன் எழுத்துக்களால் தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து பிரித்தானியவில் செந்நெறிச் செம்மல் சமுதாய சோதி என மதிப்பளிக்கப்பட்ட ஆசிரியராகவும் ஊடகவியலாளராகவும் அரசியல் ஆய்வாளராகவும் பன்முக மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் திரு சூசைப்பிள்ளை யோசப் பற்றிமாகரன் ஐயா அவர்கள் கலந்துகொண்டார்.
இவர் உரையாற்றுகையில், தமிழ் இளையோர் அமைப்பு 15 ஆண்டுகளாக பிரித்தானியாவால் நடைபெறும் அனைத்து நாடு சார்ந்த விடையங்களில் முக்கிய பங்குவகித்ததாகவும் இளையோர்களின் இந்த தன்னம்பிக்கைக்கும் தியாகத்திற்கும் நாங்கள் தலைவணங்கிறோம் எனகுறிப்பிட்டதுடன் பெற்றோhகளை சிறுவர்களுக்கு தாங்கள் கடந்நு வந்த இன அழிப்பு சம்பவங்களின் உண்மைத்தன்னையை சொல்லி வழர்கவெண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஈழத்தின் சிறப்பையும் தமிழின் முக்கியத்துவத்தையும் தனது வரிகளில் வெளிப்படுத்தும் இராவணன் ரௌத்திரம் இலண்டனில் முதல் முறையாக அரங்கேறவிருந்த வேளை பிரான்சு நாட்டு பயனத்தடை காரணமாக அவர் கலந்துகொள்ளமுடியாதமை வருத்தத்திற்குரியது.
அகவணக்கத்துடனும் ஈழக்கொடியேற்றலுடனும் தொடங்கியது இளந்தளிர் 2020. நடனங்கள் ஈழப்பாடல்களுக்கான வயலின் இசை நாடகங்கள் முதலியன அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன.
அகவணக்கத்துடனும் ஈழக்கொடியேற்றலுடனும் தொடங்கியது இளந்தளிர் 2020. நடனங்கள் ஈழப்பாடல்களுக்கான வயலின் இசை நாடகங்கள் முதலியன அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன.
மேலும் இயற்கையை மேன்மைபடுத்தும் முறையாக ‘இயற்கை’ எனும் நாட்டிய நாடகம் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விழிப்புட்டும் விதம் அமைந்திருந்தது.
தமிழர்களின் வரலாற்றில் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னனும் பிரித்தானிய அரசுக்கு தலை வணங்க மறுத்து இரண்டகர்களாள் காட்டிக்கொடுக்கப்பட்ட பண்டாரவன்னியனைப் பற்றி எடுத்துக்காட்டி ஈழத்தின் இளையொர்கள் அழகான நாடகத்தை அரங்கேற்றினர். நாம் கடல் கடந்து தாயகத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தாலும் இளைய தலைமுறை தமிழ் மன்னர்களைப் பற்றி அறிந்திகொண்டு அவர்களுடைய கதாபாத்திரங்களை புரிந்துணர்வுடன் நடித்தனர்.
தாயகத்தின் மேன்மையைக் கூறும் ‘தாய் மண்ணை முத்தம் இட வேண்டும்’ என்ற பாடலுக்கு நன்றாக நடனம் ஆடப்பட்டது. ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணை சிறப்பிக்கும் முறையாக ‘வன்னி மயில்’ என்ற பாடலுக்கும் மாணவர்கள் நடனம் ஆடினர்.
கடந்த ஆண்டு தேசிய மாவீரர் நாளில் “இனிதான உலகத்தில் அழகான தமிழீழம் உருவாக காண்போமே மாவீரரே” என்ற பாடலைப் பாடி அனைவரின் மனதிலும் அவர் குரலை பதிய வைத்தவரும் வன்னியின் குரல் 2019, யேர்மனியில் நடைபெற்ற கலைச்சாரல் 2019 மற்றும் பிரித்தானியாவில் பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பலராலும் பாராட்டுகளையும் பெற்ற தேனுகா சிவநேசராஜா அவர்களின் பாடல்களும் இடம்பெற்றது.
அத்தோடு தேசத்தின் இளஞ்சுடர் செல்வி திக்சிகாவுக்கு ஒரு காணொளியும் சமர்ப்பிக்கப்பட்டது. சிறுவர்கள் இருவரின் ஒன்றாகும் காலமிது வென்றாடும் நேரமிது என்னும் பாடல் அனைவரையும் எழுச்சியுட்டும் விதமாக இருந்தது. இறுதியில் பிரபாகரன் எங்கள் வழிகாட்டி என்னும் பாடலுக்கான நடனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.
தமிழர் வரலாற்றையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் புதிய தலைமுறைக்கு தமிழ் இளையோர் அமைப்பின் முக்கிய நொக்கமாகும். இவ்வகையில் இளந்தமிழ் நிகழ்ச்சிக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு நன்றி கூறுகிறது. ஈழத்தின் விதைகளாக விளங்கும் எங்களுடைய புதிய தலைமுறையை ஊக்குவிக்கும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.