Featureநிகழ்வுகள்
யேர்மனி வெற்றிமணிப் பத்திரிகை பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய புதுமைப் பெண்கள் 2020
உலகப் பெண்கள் தினமான 08.03.20 அன்று யேர்மனியிலிருந்து வெளிவரும் வெற்றிமணிப் பத்திரிகை புதுமைப் பெண்கள் 2020 என்று தலைப்பிட்டு பெண்களின் தனித்துவ ஆளுமைகளை வெளிப்படுத்தும் வகையில் விழதவெடுத்து சிறப்பித்தது.
இவ்விழாவிற்கு தமிழ் மரபுக் அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் யேர்மன் கிளைப் பொறுப்பாளருமாகிய முனைவர் சுபாசினி கனகரத்தினம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நடன நிகழ்ச்சிகள் பாடல் காணொளி எனவும் நெடுந்தீவு முகிலனால் தாயகத்தில் தயாரிக்கப்பட்ட அக்கரை என்ற குறும்படமும் வி.சபேசனால் தயாரிக்கப்பட்ட துணை என்ற பெண்களின் தனிமனித உரிமையை வெளிப்படுத்தும் துணை என்ற குறும்படமும் இவ்விழாவில் திரையிடப்பட்டன.
பல்துறை ஆளுமைகளைக் கொண்ட இளம்பெண்கள் நால்வர் சிங்கப் பெண்கள் என கௌரவப்படத்தப்பட்டனர்.
நீண்ட காலமாக கலை இலக்கியத்துறையிலும் பொதுவாழ்விலும் ஈடுபட்டு வரும் பெண்களுக்குப் பக்கபலமாக இருந்துவருகின்ற ஆண்களுக்கும் (கணவன)அது போல கலை இலக்கியத் துறையிலும் பொதுவாழ்விலும் ஈடுபட்டு வரும் ஆண்களுக்கு பக்கபலமாக இருந்து வரும் பெண்களுக்கும் (மனைவி) நினைவுப் பரிசு கொடுத்து கௌரவிக்பபட்டனர்.
விழாவன்று அறிவிப்பாளர்களாகவும் விழா ஒழுங்கமைப்பாளர்களாகவும் பெண்களே செயல்பட்டனர் என;பது குறிப்பிடத் தக்கதாகும்.
தகவல்: ஏலையா க.முருகதாசன்.