முச்சந்தி

சுனாமி தாக்கி 20 வருடங்களின் பின்னர் – இலங்கையில் 9 குடும்பங்கள் உரிமை கொண்டாடிய குழந்தை தற்போது உயர்தர வகுப்பு மாணவன்

2004 இல் பேரழிவை ஏற்படுத்திய இந்து சமுத்திர சுனாமியின் பின்னர் சேற்றிலிருந்து மீட்கப்பட்டு ,உணர்வுபூர்வமான நீதிமன்ற போராட்டத்தின் பின்னர் பெற்றோருடன் சேர்க்கப்பட்ட,பேபி 81 என கடந்தகாலங்களில் அழைக்கப்பட்ட சிறுவனிற்கு தற்போது 20 வயது.

அவன் தற்போது உயர்கல்வி குறித்து கனவு காண்கின்றான்.

ஜெயராஜா  அபிலாஷின்  கதை ,சமீபத்தைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை அழிவினால் துண்டாடப்பட்ட குடும்பங்களிற்கான ஒரு குறியீடு  அதேவேளை அவரின் கதை நம்பிக்கையையும் அளிக்கின்ற ஒன்று.

இலங்கையில் சுனாமி காரணமாக 35000 பேர் உயிரிழந்தனர் .

இலங்கையின் கிழக்கு பகுதியை தாக்கிய சுனாமியால் அடித்துசெல்லப்பட்ட2 வயது குழந்தையை அவனது வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உறவினர்கள் மீட்டனர்.

மருத்துவனையில் குழந்தையின்  பதிவு எண் 81.

சுனாமியால் பிரிக்கப்பட்ட தனது குடும்பத்தை அபிலாஷின்  தந்தை முருகுபிள்ளை ஜெயராஜா மூன்று நாட்களாக தேடியலைந்தார்.

அன்றைய அதிகாலையில் அவரிடம் ஒருசோடி காற்சட்டைகள் தவிர  வேறு எதுவும் இருக்கவில்லை.

முதலில் அவர் தனது தாயை கண்டுபிடித்தார்.பிறகு மனைவியை கண்டுபிடித்தார்.ஆனால் அவர்களது ஆண் குழந்தை காணாமல்போயிருந்தான்.

தாதியொருவர் அந்த குழந்தையை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டுசென்றிருந்தார் எனினும் இந்த குடும்பத்தின் துயரத்தை அறிந்ததும்,அவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்ததும், குழந்தையை மீள அவர்களிடம் ஒப்படைத்தார்.

எனினும் அந்த குடும்பம் எதிர்கொண்ட  சோதனைகள் உடனடியாக முடிவிற்கு வரவில்லை.

பேபி 81 தங்களது குழந்தை என மருத்துவமனைக்கு 9 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அறிவித்திருந்தனர்.

இதன் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை ஜெயராசா அவரது மனைவியிடம் ஆதாரம் இல்லாமல் கையளிக்க மறுத்தது.

ஜெயராசா குடும்பத்தினர் பொலிஸாரின் உதவியை நாடினார்கள்.இந்த விடயம் நீதிமன்றம் சென்றது, நீதிபதி மரபணுபரிசோதiiயை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இலங்கையில் மரபணுபரிசோதனை என்பது ஆரம்பகட்டங்களில் இருந்த காலம் அது.

ஏனைய 9 குடும்பங்களை சேர்ந்தவர்களும் தங்கள் கோரிக்கையை சட்டபூர்வமான விதத்தில் முன்வைக்கவில்லை, அவர்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என்கின்றார் ஜெயராஜ்.

எனினும் மருத்துவமனை எங்களின் பெயரை விட்டுவிட்டு ஏனைய 9 குடும்பத்தவர்களின் பெயர்களையும் சேர்த்துக்கொண்டது என அவர் தெரிவிக்கின்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது , அந்த குழந்தை தங்களுடையது என தெரிவித்த அனைவரும் தங்களை மரபணுபரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன என தெரிவிக்கும் ஜெயராஜ், அவர்களில்  எவரும் தங்களை மரபணுபரிசோதனைக்கு உட்படுத்தவில்லை நாங்கள் மாத்திரம் அதற்கு முன்வந்தோம் என  குறிப்பிடுகின்றார்.

நாங்கள் மரபணுபரிசோதனைக்கான குருதி மாதிரிகளை வழங்கினோம் அந்த குழந்தை எங்களுடையது என்பது உறுதியானது என அவர் தெரிவிக்கின்றார்.

அதன் பின்னர் விரைவிலேயே குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர் குடும்பம்  ஒன்றுசேர்ந்தது.

இந்த கதை சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது – அபிலாஷ் அமெரிக்காவிற்கும் சென்றுவந்தார்.

இன்று அபிலாஷ் காபொஉயர்தரப்பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவன்.

உறுதியான சிறந்த குணமுடைய அவர் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி தகவல்தொழில்நுட்ப கற்கை நெறியை பின்பற்றுவது குறித்து ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கின்றார்.

நான் எனது பெற்றோரிடம் இந்த கதைகளை கேட்டு வளர்ந்தேன் என தெரிவிக்கும் அவர் எனது நண்பர்கள் என்னை பேபி81  அல்லது சுனாமி பேபி என கேலி செய்வார்கள் என்கின்றார்.

எனக்கு அவமானமாகயிருந்தது, சுனாமி நினைவுதினம் வரும் ஒவ்வொருவருடமும் நிலைமோசமடைந்தது என அபிலாஸ் தெரிவிக்கின்றான்.

தன்னுடைய கதையை கேட்பதற்காக பத்திரிகையாளர்கள் வரும்போதெல்லாம் வீட்டிற்குள் ஒடி மறைந்துகொள்வோம் என நினைத்ததாக அபிலாஷ் தெரிவிக்கின்றான்.

மனவருத்தத்தினால் சிலவேளைகளில் மகன் ஒழுங்காக உணவுஉண்பதில்லை  என்கின்றார் தந்தை.

நான் மகனிடம் நீங்கள் தனித்துவமானவர்,உலகில் உங்களிற்கு மாத்திரம் இந்த பெயருள்ளது என தெரிவிப்பேன் என்கின்றார்.

எனினும் பதின்மவயதில் அவன் தனது வாழ்க்கை குறித்தும் குடும்பத்தினர் சந்தித்த நெருக்கடிகள் அவர்கள் சுனாமியால் பிரிக்கப்பட்டு பின்னர் ஒன்றிணைந்தது குறித்து நிறைய வாசித்தான்.அவனது அச்சம் இல்லாமல் போனது.

தனது வாழ்நாள் முழுவதும் அந்த பட்டப்பெயர் தொடரும் என்பது அவனிற்கு தெரியும்..

தற்போது நான் இந்த பெயரை எனது சங்கேதபெயராக பார்க்கின்றேன்,என வேடிக்கையாக தெரிவிக்கும் அபிலாஸ் என்னை கண்டுபிடிக்கவேண்டும் என்றால் அதனை பயன்படுத்துங்கள் என தெரிவிக்கின்றான்.

தன்னை பற்றி வாசிப்பதற்கு தொடர்ந்தும் அவன்இணையத்தை தேடுகின்றான்.

மகனை தேடிய அந்த நிமிடங்கள் இருபது வருடங்கள் கடந்த பின்னரும் மனதில்  பசுமையாக உள்ளதாக அபிலாஷின்  தந்தை தெரிவிக்கின்றார்.

அதேவேளை அவர்களை பற்றி உலகம் அதிகம் அறியநேரிட்டதால் அது அவர்களிற்கு பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விஜயத்தின் போது அவர்களிற்கு பணம் கிடைத்தது என அரசாங்கம் கருதியால் சுனாமி நிவாரண திட்டங்களில் இருந்து இவர்கள் தவிர்க்கப்பட்டார்கள்.

 

இந்த அனுபவம் பொறாமை  தேவையற்ற பேச்சுகளை உருவாக்கியது அயலவர்கள் இவர்களை புறக்கணிக்கும் ஒதுக்கும் நிலையை  ஏற்படுத்தியது.

இதன் காரணமாக இவர்கள் வேறு பகுதிக்கு சென்றனர்.

மகன் உயிர்பிழைத்தமை குறித்து மகனும்தனது குடும்பத்தவர்களும் நன்றியுடையவர்களாகயிருக்கவேண்டும் என தந்தை விரும்புகின்றார்.

அபிலாஷ் எதிர்காலத்தில் உதவி தேவைப்படுபவர்களிற்கு உதவவேண்டும் என அவர் விரும்புகின்றார்.

அபிலாஷ் குழந்தையாகயிருந்த காலத்திலிருந்தே அவர்கள் சிறிதளவு பணத்தை சேமிக்க தொடங்கினார்கள்.சிகையலங்கார நிலையமொன்றில் வேலை பார்த்து அதிலிருந்து கிடைத்த பணத்தில் சிறிய தொகையை தந்தை சேர்த்து வந்தார்.

அபிலாஷிற்கு 12 வயதானது போது தங்களின் வீட்டிற்கு முன்னாள் சுனாமியால்

உயிரிழந்தவர்களின்  நினைவாக இந்த குடும்பத்தினர் தூபியொன்றை எழுப்பினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.