முச்சந்தி
வரவு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் இன்னமும் தமது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இவர்களது பெயர் பட்டியலை பொலிஸாரிடம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸார் இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கையை எடுப்பார்கள் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்த வேட்பாளர்களின் பட்டியல் மாவட்ட செயலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள், சுயாதீனக் குழுக்கள் சார்ப்பில் 8388 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.