பலதும் பத்தும்
முட்டையின் வெள்ளைப் பகுதியின் உண்மைப் பெயர் என்ன தெரியுமா?:
முட்டையில் அதிகளவான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. அந்த வகையில் முட்டையின் உள்ளிருக்கும் கருவை மஞ்சள் கரு என அழைக்கின்றோம்.
ஆனால் அதனைச் சுற்றியுள்ள வெள்ளை நிறப் படலத்தை வெள்ளைக் கரு என்றுதான் கூறுகிறோம்.
ஆனால், அதன் உண்மையான பெயர் என்னவென்று எப்போதாவது சிந்தித்திருப்போமா?
உண்மையின் முட்டையின் வெள்ளைப் பகுதியின் பெயர் அல்புமென்.
முட்டையின் வெள்ளைக் கருவில் புரதச்சத்தும் மஞ்சள் கருவில் கொழுப்பு, இரும்புச்சத்து, விட்டமின்கள் போன்றனவும் உள்ளன. இது உடல், சருமம், கூந்தல் போன்றவற்றுக்கும் மிகவும் பயன் தரும்.