மக்களால் தோற்கடிக்கப்பட்ட 15 முன்னாள் தமிழ் எம்.பி.க்கள்
கடந்த பாராளுமன்றத்தில் தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தி.அமைச்சராக இராஜாங்க அமைச்சர்களாக .எம்.பி.க்களாக இருந்த பலரும் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் படு தோல்வியடைந்துள்ளனர்.
அமைச்சராகவிருந்த,டக்ளஸ் தேவானந்தா,இராஜாங்க அமைச்சர்களாகவிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன், அரவிந்தகுமார்,வடிவேல் சுரேஷ், எம்.பி.க்களாகவிருந்த சுமந்திரன்,அங்கஜன் இராமநாதன், மனோ கணேசன், செல்வராசா கஜேந்திரன்,வேலுகுமார்,கோவிந்தன் கருணாகரம், சித்தார்த்தன்,திலீபன்,மருதபாண்டி ரமேஸ்வரன்,உதயகுமார், கலையரசன் ஆகியோரே இம்முறை பாராளுமன்றத்திற்கு மக்களினால் தெரிவு செய்யப்படாது தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
இதில் டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமாகவும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவராகவும் மனோ கணேசன் தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவராகவும் சித்தார்த்தன் தமிழ் மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) தலைவராகவும் கோவிந்தன் கருணாகரம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)செயலாளர் நாயகமாகவும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது