Uncategorizedகவிதைகள்
பெம்மான் முருகன்!… (4 ம் நாள்) …. கவிதை… ஜெயராமசர்மா
பேதம் பர்க்கான் பெம்மான் முருகன்
உருகும் அடியார் உளமே அமர்வான்
சுருதிப் பொருளாய் அவனே உள்ளான்
செருவை அடக்கின் முருகன் தெரிவான்
வேடப் பெண்ணை விரும்பி அணைத்தான்
விண்ணவன் பெண்ணையும் தன்னுடன் இணைத்தான்
மோதிய அசுரரை பக்கமே வைத்தான்
மேதினி ஒளிக்க வந்தவன் கந்தனே
சண்டை என்பது சம்காரம் அன்று
சம்காரம் என்பது சஞ்சலம் அறுப்பதே
சஞ்சலம் அறுக்கவே சங்கரன் நினைத்தான்
கந்தனைக் கொடுத்து கருணையைக் காட்டினான்
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா