அரசியல் ஓய்வை அறிவித்த மஹிந்த; பாராளுமன்றம் செல்லும் நாமல்!
அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தல் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதனால் தான் அரசியலில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார்.
“கண்டி மாவட்ட மக்களின் முடிவுக்கு தலைவணங்குகிறேன். அதன்படி, அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என்னை அரசியலுக்கு அழைத்து வந்த அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ”
பாராளுமன்றம் செல்லும் நாமல்!
2024 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.
இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய சாகர காரியவசம்,
“இந்த ஆணையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்களிடம் மாவட்ட அளவில் 02 பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளும் தேசிய பட்டியலில் ஒரு பாராளுமன்ற பதவியும் உள்ளது.”