இந்தியா
அயோத்தி ராமர் கோவிலின் முதல் தீபாவளி; மோடி வாழ்த்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருட தீபாவளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தீபாவளியாக அமையவுள்ளது என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“தந்திராஸ் பண்டிகை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
இத் தீபாவளி மிகவும் சிறப்பானது. சுமார் 500 வருடங்களுக்குப் பின்னர் கடவுள் ஸ்ரீ ராமர் அயோத்தியில் வீற்றிருக்கிறார்.
முதல் முறையாக அவர் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளார்.
எனவே, இத் தீபாவளி பண்டிகை நம் அனைவருக்கும் பிரம்மாண்டமாகவும் சிறப்பானதாகவும் இருக்கும். இதனைக் காணும் நாம் அனைவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்” என தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் நிர்மாணிப்பது தொடர்பில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்தது.
இப் பிரச்சினைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதற்கு பதில் அயோத்தியில் மிகப் பெரிய மசூதி கட்டுவதற்கு இடம் ஒதுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வருட ஜனவரியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அதன்படி, அயோத்தி ராமர் கோயிலுக்கு இதுவே முதல் தீபாவளி.