சரிவடையும் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி – சஜித் அணி சுட்டிக்காட்டு
எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியினால் ஒரு பிரதேச சபையின் அதிகாரத்தைக் கூட கைப்பற்ற முடியாத நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர்,
நடைபெற்று முடிந்த எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியில் வீழ்ச்சி ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இடம்பெறும் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஆளும் கட்சியே அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதே வழமையாகும்.
எவ்வாறாயினும், இந்தமுறை முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 17,000 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தாலும், ஏனைய கட்சிகளுக்குக் கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 19,000 ஆகும்.
எனவே, தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் வரவேற்பு குறைவடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.