முச்சந்தி

பார் லைசன்ஸ் நாங்கள் எடுத்த சரித்திரமே இல்லை!

நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் அதன் சூத்திரதாரிகள் தற்போது எங்களுக்கு முன்னாலே நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சரும் தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தேர்தல் காரியாலயம் நிகழ்வு முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் கொக்கட்டிச்சோலை, பட்டிப்பளை பகுதியில் இடம்பெற்றது.

கட்சியின் தேர்தல் காரியாலயம் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து மங்கல விளக்கேற்றி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது விநாயகமூர்த்தி முரளிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தேசிய ஜனநாயக முன்னணி இரண்டு பெண் வேட்பாளர்கள் உட்பட 8 தமிழ் வேட்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றோம்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல்கள் இரண்டு முறை நான் பாராளுமன்றத்தில் இருந்திருக்கின்றேன் பல வேலை திட்டங்களை செய்து இருக்கின்றோம் கோடிக்கணக்கான நிதியினை செலவழித்து இருக்கின்றோம் எவருமே கருணா அம்மான் என்கின்ற பெயருக்கு ஊழல் குற்றச்சாட்டு எந்த குற்றச்சாட்டும் செலுத்த முடியாது மண் பர்மிட், பார் லைசன்ஸ் நாங்கள் எடுத்த சரித்திரமே இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களை ஏமாற்றி கடந்த காலங்களில் ஏமாற்றி ஏமாற்றி தற்போது சம்பந்தன் ஐயாவின் மறைவுக்கு பின்னர் சிதறுண்டு காணப்படுகின்றது அத்தோடு பணத்துக்கு ஆசைப்பட்டு பதவிக்கு ஆசைப்பட்டு சிதறுண்டு காணப்படுகின்றது.

ஜனா அண்ணன் கூறுகின்றார் சாணக்கியன் 60 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று இருக்கின்றார் என்று உண்மையான விடயம். சாணக்கியன் கூறுகின்றார் ஜனா அவர்கள் பல்லாயிரக்கணக்கான சொத்துக்களை குவித்திருக்கின்றார் என்று. அதுவும் உண்மையான விடயம் ஆகவே அதே போன்று உங்களுக்கு தெரியும் ஏனைய கட்சியினர் இன்று 588 கோடி ரூபாய் ஊழலினை செய்த கட்சியும் தற்போது போட்டியிடுகின்றதே இவர்கள் எல்லாம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாய தேவையில் இருக்கின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வர வேண்டும் என்பதற்காக நாங்கள் தமது ஆதரவை வழங்கியிருக்கின்றோம் என்ன காரணம் என்றால் சிங்கள உறுப்பினர் தான் ஜனாதிபதியாக இந்த நாட்டிலே வருவார். அவர் ஒரு நல்லவராக இருக்க வேண்டும் ஊழல் அற்றவராக இருக்க வேண்டும். என்பதற்காக மதிப்பிற்குரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம்.

ஆனால் அவருடைய நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரியவில்லை ஏனென்றால் ஊழலை முற்றாக ஒழிப்பேன் உடனடியாக விசாரிப்பேன் கைது செய்வேன் என்று எல்லாம் கூறியிருக்கின்றார் உண்மையில் அவை அனைத்தும் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதனை இவ்விடத்தில் ஜனாதிபதியிடம் கூற விரும்புகின்றேன்.

ஏனென்றால் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதன் சூத்திரதாரிகள் தற்போது எங்களுக்கு முன்னாலே நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். மட்டக்களப்ப சியோன் தேவாலயத்தில் 24 குழந்தைகள் பச்சிளம் சிறார்கள் மரணம் அடைந்தார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் இன்று ஒரு சிறந்த தலைமைத்துவத்தை தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது நாங்கள் வந்திருக்கின்றோம்.

உண்மையில் வீடு வீடு என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தவர்கள் அனைத்து இடங்களிலும் லஞ்சத்தை வாங்கி கொழும்பில் வீடு வேண்டுமா அல்லது வெளிநாட்டில் வீடு வேண்டுமா என்று வாங்கி இருக்கின்றார்கள் ஆனால் இங்கு வாக்களித்த மக்கள் வீடும் இல்லாமல் கதவும் இல்லாமல் இருக்கின்றார்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

தேசியம் தேசியம் என்பது எல்லாம் வெறும் போலித்தனமாக பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆகவே இவர்கள் லஞ்சமாக வேண்டிய பணத்தை மக்களுக்கு செலவழித்து இருந்தால் பாரிய வேலைத் திட்டங்களை முடித்திருக்கலாம் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.