‘நிசார்’ செயற்கைக் கோள்; அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் நாசா ஆய்வு மையமும் (இஸ்ரோ) இணைந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் பணிக்கு ‘நிசார்’ என பெயரிட்டுள்ளனர்.
இப் பணியின் நோக்கம் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகளாவிய ரீதியில் நிலப்பரப்புக்களில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதே.
12 நாட்களுக்க ஒரு முறை பூமியின் நிலம் மற்றும் பனியால் மூடப்பட்ட மேற்பரப்புக்களை மேலும் கீழும் இத் தொழில்நுட்பம் ஆய்வு செய்கிறது.
அதன்படி, 3 வருடங்களுக்கு ஒவ்வொரு 6 நாட்களுக்கு ஒரு தடவை நிசார் செயற்கைக்கோள் தரவுகளை சேகரிக்கும்.
பனிப்பாறை இயக்கம், பூகம்பம் உள்ளிட்டவற்றை ஆராய இத் திட்டம் உதவும்.
இச் செயற்கைக்கோள் 2025 ஆம் ஆண்டு ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 எனும் ரொக்கெட் மூலம் பூமியின் சுற்றுப் பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிசார் செயற்கைக் கோளினால் பெறப்படும் தரவுகளை பொதுமக்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.