அரச ஊழியர்கள் இறந்துவிட்டால்; குடும்ப ஓய்வூதியம் யாருக்குச் செல்லும்?
மத்திய அரச ஊழியர்கள் இறந்துவிட்டால் அவர்களின் ஓய்வூதிய உரிமை யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது தொடர்பில் பலவிதமாக வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
அவ் வழக்குகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி மத்திய அரச துறைகளுக்கு ஓய்வூதியத் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
‘ஊழியர்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்கும்பட்சத்தில் இரண்டாம் திருமணத்தின் சட்டப்பூர்வ நிலை தீர்மானிக்கப்பட்ட பின்னர் ஓய்வூதியம் வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும்.
மத்திய அரச ஊழியரின் இறுதி சம்பளத்தின் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அதன்படி 3500 ரூபாவிலிருந்து 27,000 ரூபாய் வரையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
அதுவே 7 வருடங்களுக்கும் அதிகமாக ஊழியர்கள் சேவை செய்திருந்தால் அவர்களின் இறுதி சம்பளத்தில் 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
ஊழியரின் தாய், தந்தை இருவரும் உயிரோடிந்தால் இறுதி சம்பளத்தின் 75 சதவீதம் குடும்ப ஓய்வூதியாக வழங்கப்படும்.
இருவரில் ஒருவர் மட்டும் இருந்தால் 60 சதவீதம் வழங்கப்படும்.
பணி செய்யும் நேரத்தில் ஊழியர்கள் இறந்தால் 10 வருடங்கள் 50 சதவீத ஓய்வூதியம் வழங்கப்பட்டு அதன் பின்னர் 30 சதவீதமாக குறைக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.