அமெரிக்க தேர்தலில் பிரித்தானியா தலையீடு; ட்ரம்ப் தரப்பு குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கு பிரித்தானியாவிலுள்ள தொழிற்கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் முன்வந்துள்ளமையால் டொனால்ட் ட்ரம்பின் பிரச்சாரக் குழு, பெடரல் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.
பிரித்தானியானவின் தொழிற் கட்சி, அமெரிக்க தேர்தலில் தலையிடுவதாகவும் டொனால்ட் ட்ரம்பின் பிரச்சாரக் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
சுமார் 100 தொழிற் கட்சி அங்கத்தவர்கள் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தொழிலாளர் கட்சியின் செயற்பாட்டுத் தலைவரான சோபியா படேலின் பதிவை மேற்கோள்காட்டி ட்ரம்பின் பிரச்சாரக் குழு முறைப்பாடளித்துள்ளது.
பிரித்தானிய தொழிற் கட்சியால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான சட்டவிரோத வெளிநாட்டு தேசிய பங்களிப்புகள் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான இரு வேட்பாளர்களான கமலா ஹாரிஸும் டொனாலட் ட்ரம்பும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், 50 அமெரிக்க மாநிலங்களில் 26 மாநிலங்களில் ஆரம்ப வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.
அண்மைய கருத்துக் கணிப்புகள், ட்ரம்பை விட ஹாரிஸ் முன்னிலை வகிக்கின்ற போதிலும் முக்கிய மாநிலங்களில் இருவரிடையே பாரிய இடைவெளி இல்லை எனக் கூறப்படுகின்றது.