இலங்கை

தமிழின அழிப்பு யுத்தத்தை இந்தியா தடுக்கவே இல்லை; தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத எரிமலையாக எரி்கின்றது 

தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு கோர யுத்தத்தை இந்தியா தடுக்கவில்லை என்ற மனக் குமுறல் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத எரிமலையாக எரி்ந்து கொண்டிருக்கின்றது இதற்கான பரிகார நீதியை பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு இந்தியப்பிரதமர் பெற்றுக்கொடுக்க வேண்டுமென வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஐெய்சங்கர் எழுதிய ‘‘The India Way: Strategies for an Uncertain world’’ என்ற நூலின் சிங்கள மொழி பெயர்ப்பு நூலான “இந்திய மாவத்தை” 1987 ஆண்டு இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பியது தவறு என பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

உண்மையாக இந்திய படைகளின் வருகை இலங்கை இந்திய உறவை பாதித்ததை விட இந்திய ஈழத் தமிழர்கள் இடையே பாரிய இராஜதந்திர பின்னடைவை ஏற்படுத்தியதுடன் பெரும் தொகையான உயிர் இழப்புக்களும், சொத்து அழிவுகளும் ஏற்பட்டது இது வரலாறு.

இராஜதந்திரிகளின் அல்லது தலைவர்களின் உரைகள் மற்றும் நூல்களின் பதிவுகள் எதிர்கால அரசியல் ராஜதந்திர காய் நகர்த்தலுக்கான வியூகமாகவும் காலம் கடந்து உண்மையை வெளிப்படுத்துவதன் மூலம் அறுந்து போன அல்லது உடைந்து போன அரசியல் உறவைப் புதிப்பிப்பதற்கும் வழிகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு தான் கடந்த தமிழக சட்டசபைத் தேர்தல் காலத்திலும் இராமேஸ்வரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பாஜக வின் முக்கிய தலைவர் ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை முன்னைய ஆட்சியாளர்கள் தடுக்க தவறியதாக உரையாற்றியதை ஊடகங்கள் மூலம் எல்லோரும் பார்த்தனர்.

உண்மையாக 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரை இந்தியா தடுத்து நிறுத்தி இருந்தால் பாரிய இன அழிப்பு தடுக்கப்பட்டிருக்கும் கோர யுத்தத்தை இந்தியா தடுக்கவில்லை என்ற மனக் குமுறல் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத எரிமலையாக எரி்ந்து கொண்டிருக்கின்றது இதற்கான பரிகார நீதியை பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு பெற்றுக் கொடுக்க இந்தியப் பிரதமரும் வெளியுறவு ராஜதந்திர செயலகமும் பாதிக்கப்பட்ட மக்களினதும் ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் முன்னைய ஆணையாளரின் இறுதியான அறிக்கையின் பரிந்துரையுமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்புக் கூறலும் நீதியும் மீள் நிகழாமையும் கிடைக்க ஒத்துழைப்பு வழங்க தற்போதைய இலங்கை ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் இருந்து மீண்டவன் என்ற வகையில் வினயமாக வேண்டுகிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.