பலதும் பத்தும்
செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் ‘புரோபா-3’
செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் ‘புரோபா-3’ செயற்கைக்கோளை நவம்பர் 29ம் திகதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) இணைந்து, விண்வெளியில் செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்க, ‘புரோபா-3’ என்ற இரட்டை செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது.
விண்ணில் இருந்து புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் வகையில் இந்த இரட்டை செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, ‘புரோபா-3’ செயற்கைக்கோள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு இன்று அந்த செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சற்று வித்தியாசமான சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.