இந்தியா – பாகிஸ்தான் திருமணம் இணையத்தில் முடிந்தது
இந்தியா பாரதீய ஜனதா கட்சியின் தலைவரின் மகனுக்கும் பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இணையத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மணமகளை பார்க்க விசா கிடைக்காததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா இல்லாத மணமகன் அப்பாஸ் ஹைதர், இவரின் தந்தை தஷீன் ஷாஹீப். சில நாட்களுக்கு முன், அப்பாஸ் ஹைதர், தஷீன் ஷாஹீப் மற்றும் குடும்பத்தினர் திருமணத்திற்காக பாகிஸ்தான் செல்ல விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், திருமண நாள் நெருங்கியும் பாகிஸ்தான் அரசு விசா வழங்கவில்லை.
அந்த்லீப் சஹாரா என்ற மணப்பெண்ணுக்கும் அவரது தாயார் ராணா யாஸ்மீனுக்கும் விசா நெருக்கடி அதிர்ச்சியை ஏற்படுத்தியது, மணமகளின் தாய் ராணா யாஸ்மீன் நோய்வாய்ப்பட்டு லாகூரில் உள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கமைய, திருமண சடங்குகளை ஆன்லைனில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, மணமகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்பூரிலிருந்து ஆன்லைனில் இணைந்ததோடு திருமண சடங்குகளை நிறைவு பெற்றது