ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை!
ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக மூடப்பட இருந்த ரயில் நிலையத்தை அந்த மாணவியின் படிப்பு முடியும் வரை திறந்து வைத்த நெகிழ்ச்சியான உண்மை சம்பவம் தான் இது..!!
ஜப்பானின் (Kyu-shirataki Station) கியூ ஷீராட்டகி என்கிற ஊரில் தினமும் ஒரே ஒரு ரயில் மட்டும் வந்து செல்லும் ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது.
அந்த ரயில் நிலையத்துக்கு போதிய பயணிகள் வராததால் ஜப்பானிய ரெயில்வே அந்த ரயில் நிலையத்தை 2015 ம் ஆண்டு உடனடியாக மூடி விட முடிவு செய்தது.
ரயில் நிலை யத்தை மூடும் முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் கன ஹரதா என்கிற ஒரே ஒரு பள்ளி மாணவி மட்டும் தினமும் கியூ ஷிராட்டகி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 35 நிமிடங்கள் பயணம் செய்து மற்றுமோர் ரயில் நிலையத்தை அடைந்து அதன் பின் பள்ளிக்கு செல்வதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக ரயில் நிலையத்தை மூடினால் மாணவியின் உயர்பள்ளி படிப்பு பாதிக்கும் என்பதால் அந்த மாணவியின் படிப்பு முடியும் வரை கிட்டதட்ட 15 மாதங்கள் அந்த ரயில் நிலையத்தை திறந்து வைத்து படிப்பு முடிந்த பின் மூடியது ஜப்பானிய ரயில்வே..!!