பலதும் பத்தும்
இந்த பஸ் எங்கேயோ போகுது…
தமிழ் படமொன்றில், நகைச்சுவை நடிகர் வடிவேலு பஸ் நடத்துனராக நடித்திருப்பார். அவர் பஸ் மாறி ஏறிவிட்டு, பெரும் ரகளையை செய்துவிடுவார். இறுதியில், பயணிகள், அவரை கும்மி எடுத்துவிடுவார்கள் என்பது பலருக்கும் ஞாபகத்தில் இருக்கும்.
நமது நாட்டை பொறுத்தவரையில் அரசகரும மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அமலில் இருந்தாலும், தமிழ் மொழியை பொது இடங்களில் மிகச் சரியாக பயன்படுத்துவது குறைவாக இருக்கிறது.
இவ்வாறு எழுத்து, பொருள் பிழைகளுடன், பொதுவெளியில் காட்சி படுத்தப்பட்டிருந்த விளம்பர பலகைகள், பஸ்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஊர்களின் பெயர்களை அடங்கிய பலகைகளில் தூசன வார்த்தைகளின் அர்த்தங்களும் வந்துவிடுகின்றன.
தெனியாய- ஊருபொக்க தனியார் பஸ் வண்டியில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட பெயர் பலகையில் தமிழ் மொழி கொலை செய்யப்பட்டுள்ளதை பாருங்கள்