ஆட்சிக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன்
‘திராவிடநல் திருநாடு’ என்றிருப்பதை அகற்றும் வகையில், புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நான் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
நாமக்கல்லில் நேற்று (21) செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது,
2016-இல் நான் அரசியலுக்கு வந்த போது புத்தகம் ஒன்றை வெளியிட்டேன். அதில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன் என தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டை திராவிடா் நாடு எனக் கூறுவதை ஏற்க முடியாது. நான் ஆட்சிக்கு வந்தால் பாரதிதாசன், தேவநேயப் பாவாணா் போன்ற தமிழறிஞா்களின் பாடலில் ஒன்றை வாழ்த்துப் பாடலாக மாற்றுவேன்.
புதுச்சேரி வாழ்த்துப் பாடல் தமிழ் சாா்ந்ததாகத் தான் உள்ளது. தமிழ் எனது மொழி, திராவிடா் என்பது எங்கிருந்து வந்தது. திராவிடம் குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னிடம் நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா? தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தே திருவள்ளுவா் உள்பட பல கவிஞா்களும் பாடல்களை உருவாக்கியுள்ளனா்.
மனோன்மணீயம் சுந்தரனாா் பாடலை நீண்ட நாள் பாடியாயிற்று, நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடநல் திருநாடு என்பது அகற்றப்படும், புதிய தமிழ்த்தாய் பாடல் ஒலிக்கும். தமிழா் கழகம் என பெரியாா் வைத்த பெயரை, திராவிடா் கழகம் என மாற்றியது யாா் என்பது இந்த உலகுக்கு தெரியும்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். புதியவா்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோ்தல் பணியானது நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் வேளையில், உள் இட ஒதுக்கீடு கோரி போராடுவதை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம்.
‘திராவிடநல் திருநாடு’ என்றிருப்பதை அகற்றும் வகையில், புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நான் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
2016-இல் நான் அரசியலுக்கு வந்த போது புத்தகம் ஒன்றை வெளியிட்டேன். அதில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன் என தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டை திராவிடா் நாடு எனக் கூறுவதை ஏற்க முடியாது. நான் ஆட்சிக்கு வந்தால் பாரதிதாசன், தேவநேயப் பாவாணா் போன்ற தமிழறிஞா்களின் பாடலில் ஒன்றை வாழ்த்துப் பாடலாக மாற்றுவேன்.
புதுச்சேரி வாழ்த்துப் பாடல் தமிழ் சாா்ந்ததாகத் தான் உள்ளது. தமிழ் எனது மொழி, திராவிடா் என்பது எங்கிருந்து வந்தது. திராவிடம் குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னிடம் நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா? தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தே திருவள்ளுவா் உள்பட பல கவிஞா்களும் பாடல்களை உருவாக்கியுள்ளனா்.
மனோன்மணீயம் சுந்தரனாா் பாடலை நீண்ட நாள் பாடியாயிற்று, நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடநல் திருநாடு என்பது அகற்றப்படும், புதிய தமிழ்த்தாய் பாடல் ஒலிக்கும். தமிழா் கழகம் என பெரியாா் வைத்த பெயரை, திராவிடா் கழகம் என மாற்றியது யாா் என்பது இந்த உலகுக்கு தெரியும்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். புதியவா்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். 10இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோ்தல் பணியானது நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் வேளையில், உள் இட ஒதுக்கீடு கோரி போராடுவதை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம்.