உலகம்
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்; பெண்கள் உட்பட 33 பேர் பலி
வடக்கு காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 21 பெண்கள் உட்பட சுமார் 33 பேர் உயிரிழந்தள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
மேலும் 85 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 400,000 பேர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக உணவு அல்லது நீரின்றி முகாமுக்குள் சிக்கியுள்ளனர்.
இந்த வாரம் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டது சில பகுதிகளில் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனாலும் தொடர் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.
லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுடன் இஸ்ரேல் போரிட்டு வரும் நிலையில் போர்நிறுத்தத்தை நோக்கி செயற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். ஆனால் காசாவில் அதற்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.