திடீரென சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள்!! அலறியடித்து ஓடிய மக்கள்!
மனிதர்களுக்கு பல்வேறு விஷயங்கள் பயத்தை ஏற்படுத்தும். காலருகே ஓடும் கரப்பான் பூச்சியில் இருந்து, கதவருகே ஒளிந்து பயமுறுத்தும் பல்லி வரை எதைக்காண்டாலும் நமக்கு பயம்தான் முதலாவதாக வரும். ஆனால், உயிர் பயத்தை ஏற்படுத்தும் விஷயங்கள், உண்மையாகவே “உயிர் போய்விடுமோ!” என்று நமக்கு தோன்ற வைத்துவிடும். இதற்கு ஆங்கிலத்தில் Near Death Experience என்று பெயர். இது போன்ற பய உணர்வு, நாம் ஏதேனும் விபத்தில் சிக்கும் போது ஏற்படும். அல்லது, எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடரின் போது ஏற்படும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றை இங்கு பார்க்கலாம்.
மனிதர்களில், எப்போதும் கோபப்பட்டுக்கொண்டு அனைவரிடமும் எரிந்து விழும் குணம் படைத்தவரை கூட “அவர் குணம் அப்படித்தான்” என்று நம்பி விடலாம். ஆனால், எப்போதும் அமைதியாக இருந்து, ஒரு கட்டத்தில் திடீரென சீறும் மனிதர்கள் எப்படி அப்படி மாறுவார்கள் என்பதே தெரியாது.
இயற்கையும் அப்படித்தான், நாம் எவ்வளவு ஏறி மிதித்தாலும், எவ்வளவோ இயற்கையை அழிக்கும் விஷயங்களை செய்தாலும், எப்போதும் அமைதியாக இருக்கிறது. ஆனால், அது ஒரு நாள் சீற்றம் கொள்ள ஆரம்பித்தால் நாம் என்ன ஆவோம் என்பதே நமக்கு தெரியாது. சுனாமி, எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகள் அப்படித்தான் நிகழ்கின்றன. அப்படி, திடீரென எழுந்த ஒரு சுனாமி அலையின் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பதிவிட்டிருக்கும் நபர், “இயற்கை என்பது அனுமானிக்க முடியாதது” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பலரும், ”உண்மைதான்” என்று கமெண்ட் செய்திருக்கின்றனர்.
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், பார்ப்பதற்கு கடல் முதலில் அமைதியாக இருக்கிறது. இதை சிலர் அருகில் நின்று வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அதன் பின்னர், பொங்கி வந்த கடல், அனைவரையும் அலறி ஓட வைத்தது. வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நபர் உட்பட அனைவருமே அலறி அடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் கடலைத்தாண்டி சில மீட்டர் தொலைவுக்கு கடல் நீர் முட்டி அளவிற்கு சூழ ஆரம்பித்து விட்டது. அங்கிருந்த கார்கள் மற்றும் பிற வாகங்கள் டயர் வரை மூழ்கின. இந்த வீடியோ பலரை கதிகலங்க வைத்திருக்கிறது.