நடிகர் சல்மான் கானைக் கொன்றுவிட்டு கொலையாளிகள் இலங்கைக்கு தப்பிக்கத் திட்டம்!
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சர்வதேச கிரிமினலான லோரன்ஸ் பிஷ்னோய் குறிவைத்துள்ளார். அவரை கொன்று விட்டு தமிழகத்தின் கன்னியாகுமரி ஊடாக இலங்கை சென்று அங்கிருந்து கொலையாளிகள் வெளிநாடொன்றுக்கு தப்பிச்ச செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சல்மான் கானை லோரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த சுமார் 70 பேர் சல்மான் கானை, 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக மகராஷ்டிரா காவல்துறை கருதுகிறது.
1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பின்போது, அரிய வகை மானை வேட்டையாடியதாக சல்மான் கான் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இதனை குறிப்பிட்டு, அவர் பிஷ்னோய் இன மக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
சல்மான் கான் செய்த குற்றத்திற்காக அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று, மாபியா கும்பல் தலைவனான லோரன்ஸ் பிஷ்னோய் அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பையடுத்து, சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. அவருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான பாபா சித்திக் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவரை கொன்றது லோரன்ஸ் பிஷ்னோய் கேங்தான் என்று சொல்லப்படுகிறது. தற்போது லோரன்ஸ் குஜராத் சிறையில் இருந்தாலும், அங்கிருந்தவாரே அவரது ஆட்களை கொண்டு பல்வேறு குற்ற செயல்களை செய்து வருகிறார். இப்படி இருக்கையில் சல்மான் கானுக்கு இவர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளார். இதனால் சல்மான் கானுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இந்த அச்சுறுத்தலால் படப்பிடிப்புகளில் நிம்மதியாக பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது.
மேலும் கொன்று விட்டு தமிழகத்தின் கன்னியாகுமரி ஊடாக இலங்கை சென்று அங்கிருந்து கொலையாளிகள் வெளிநாடொன்றுக்கு தப்பிச்ச செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் எனில் ரூ.5 கோடி வேண்டும் என்று மர்ம நபர்கள், மும்பை போக்குவரத்து பொலிஸாருக்கு செய்தி அனுப்பியுள்ளனர். மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த செய்தியில் , “லோரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வந்து, சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் எனில், ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். கொடுக்க தவறினால், பாபா சித்திக்கை விட சல்மான் கானின் நிலை மோசமடைந்துவிடும். இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.