நின்றுகொண்டே உறங்கும் குதிரைகள்; நீண்ட நாள் கேள்விக்கு பதில்
ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் மற்றும் தனித்துவங்கள் உள்ளன. அந்த வகையில் ஏனைய விலங்குகள் படுத்துக்கொண்டும் உட்கார்ந்துக் கொண்டும் உறங்கும்போது, இந்த குதிரைகள் மட்டும் ஏன் நின்றுகொண்டே உறங்குகின்றன என்ற சந்தேகம் நீண்ட காலமாக இருந்தது.
தங்களை வேட்டையாட வரும் ஏனைய விலங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காகவே குதிரைகள் நின்றுகொண்டே உறங்குகின்றன.
குதிரை அதிக உடல் எடை கொண்டது. அதுமட்டுமின்றி அதன் முதுகும் நேராக இருக்கிறது.
இதன் காரணமாக ஒரு தடவை அமர்ந்துவிட்டால் அதனால் சட்டென எழுந்திருக்க முடியாது. அது எழுவதற்குள் ஏனைய விலங்குகள் அதனை கொன்றுவிடும்.
இதன் காரணமாகவே இயற்கையாகவே குதிரைகளுக்கு நின்றுகொண்டு உறங்கும் ஆற்றல் உள்ளது.
நின்றுகொண்டு உறங்கும்போது குதிரைகள் விழுந்துவிடாதா என்று சிலருக்கு நினைக்கத் தோன்றும்.
அதுதான் இல்லை. குதிரைகளின் கால்களில் சிறப்புத் திறன் இருக்கிறது. இதனால் உறங்கும்போது முழங்கால்களை விறைத்து நிற்கும். இதன் காரணமாகவே உறங்கும்போது கூட குதிரைகள் ஸ்ட்ரோங்காக நிற்கிறது.